Ahlussunna online Dawah Service.


BATUPITIYA

                       இஸ்லாத்தில் படைப்பினங்களின் உரிமைகள்

Photo: இஸ்லாத்தில் படைப்பினங்களின் உரிமைகள்  பேராசிரியர் உஸாமா அல் சையித் அல் அஸ்ஹரி  சிரேஷ்ட விரிவுரையாளர் அல் -அஸ்ஹர் பல்கலைக்கழகம் எகிப்து  தமிழாக்கம் - பஸ்ஹான் நவாஸ் - Fazhan Nawas  மனித உரிமைகள் என்ற விடயத்தைத் தாண்டி மிருகங்களின் உரிமைகளுக்காக இன்று குரல் எழுதப்பப்பட்டு வருகிறது. இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகள் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக இமாம் ஷம்ஸ் இப்ன் துலுன் அல் ஹனபி தனது புத்தகத்தில் தனியொரு பகுதியை ஒதுக்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் உற்கார்ந்திருக்கும் போது ஒரு பூனை அவர்களிடம்; வரும். தன்னிடமிருக்கும் பாத்திரத்தில் நீரை அதற்கு குடிப்பதற்காக கொடுக்கும் பழக்கத்தை அவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “இவை உங்கள் மத்தியில் இருக்கின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகளைப் பற்றி கூறுவார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்கள் ஒரு நாள் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் உற்கார்ந்;திருக்கும் இரண்டு வரிசைகளுக்கு மத்தியில் ஒரு பூனை அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஒரு மாணவன் பூனையை அழுத்தமாக தள்ளிவிட்டான். இந்தக் காட்சி இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. பூனையை எடுத்து தனது கதிரைக்கு அருகில் வைத்தார்கள். தான் சாப்பிடும் உணவுவில் இருந்து ஒரு பகுதியை அந்தப் பூனைக்காக வழங்கினார்கள். பின்னர் இமாம் அவர்கள் அதனை தனது மடியில் வைத்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. இதேவேளை, இமாம் அபுல் பரகாத் அவர்கள் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது இந்தப் பூனைக்காக ஏதாவது ஒன்றை சாப்பிடக் கொடுத்துவிட்டு செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள். சில நாட்களில் இமாம் அவர்கள் அல் அஸ்ஹருக்குள் நுழையும் போது அவரை 200 பூனைகள் புடை சூழ்ந்து கொண்டன. அவை அனைத்தும் இமாம் அவர்களின் பின்னாள் சுற்றித் திரிந்தன. எனினும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால், மிருகங்களுக்குக் கூட அன்பு செலுத்துமாறு இஸ்லாம் எமக்குக் கட்டளையிடுகிறது, இந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உயிரினங்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும், மனித உரிமைகளை வழங்குவதிலும் முஸ்லிம்கள் பின் நிற்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உயிரினங்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென்பது முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உலகிலுள்ள அனைத்துப் படைப்பினங்களும் இறைவனின் மகத்துவத்துக்கு உரியவையாகும். இதனால் ஒவ்வொரு படைப்பினத்திற்கும் உரிமைகளும், மகத்துவமும் காணப்படுகின்றன. உயிரினங்களுக்கும், மனிதனுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்த இது வழிவகுத்துள்ளது. ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் “உஹத் மலையை நோக்கி “இது எம்மை நேசிக்கின்றது. இதனையும் நாம் நேசிக்கின்றோம்’’ என்று கூறினார்கள். “எவனுக்கும் பயனற்று வாழும் மனிதன் மரணிக்கும் போது வணக்கவாளிகளுக்கு நிம்மதி கிடைக்கிறது. மரங்களும், பூமியும், மிருகங்களும்; இதனால் நிம்மதியடைகின்றன. ஏனெனில் அவனது கரங்களினால் ஏற்படும் பாவங்களுக்காக வணக்கவாளிகளும், பூமியும், மரங்களும், உயிரினங்களும் கவலையடைகின்றன”.  “(அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை. (தப்பிச்செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை” சூறா அத்துகான்: 29ம் வசனம்   இதனால் தான் சிறந்த மனிதனொருவன் உலகைவிட்டு பிரியும் போது பூமிகளும், வானங்களும் அவனது மறைவிற்காக கண்ணீர் சிந்துகின்றன என்று கூறப்படுகிறது.   கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும் போது மிருகங்களுக்காக நீர் அருந்தும் பகுதிகள் நகரங்களில் விஷேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. கெய்ரோ நகரிலும் சுத்தமான நீரை அருந்துவதற்காக சதுக்கமொன்று அமைக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் அருந்துவதற்காக மிக உயரமான பகுதியில் ஒரு நீர் தாங்கி அமைக்கப்பட்டிருந்தது. நீர்; கீழே வரும் போது அது மிருகங்களுக்கு அருந்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது படிமுறை பூனை போன்ற சிறு உயிரினங்களுக்கு இலகுவான முறையில் நீரை அருந்துவதற்கான வசதி அதில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  நாய், பூனை போன்றவை நீர் அருந்தும் தடாகத்தை சுத்தம் செய்வதற்காக தனி நபரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திறைசேரியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது. இலைகள் போன்ற நீரை மாசுபடுத்தும் பொருட்களை சுத்தப்படுத்துவதற்காக விசேட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அல்-அஸ்ஹர் பலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ள முஹம்மத் அபு அல் தஹாப் பள்ளிவாசலின்; மினாராவின் உயரமான பகுதியில் பறவைகளுக்கு உணவு அருந்துவதற்கான விசேட பகுதியொன்று அமைக்கப்பட்டிருந்தது. உணவு உட்கொள்வதற்காக உரிமைகளை உயிரினங்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளமை இதற்கான காரணமாகும்.  (எனது ஆசிரியர்) பேராசிரியர் இமாம் முப்தி அலி ஜூம்மா முஹம்மத் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் தொடர்பான விளக்கங்களை எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பூனையை கொடுமைப்படுத்தியமையினால் நரகம் சென்ற பெண்ணைப் பற்றி அவர்கள் எடுத்துக் கூறுவார்கள்.  இந்த சம்பவம் மக்களின் அறிவிற்கு எட்டும் வகையில் விளங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இது காலம், இடம், நேரம், சந்தர்ப்பம், தனியாள் என்பனவற்றுக்கு ஏற்ற வகையில் பொருந்தக்கூடியதென்று இமாம் அல் கராபி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் பெண்களுக்கு மாத்திரம் பொருத்தமானதல்ல. தண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியே இந்த ஹதீஸ் கூறுகிறது.  ஓர் ஆண் உயிரினத்தின் மீது அநீதி இழைத்தால் அவன் தண்டனைக்கு உள்ளாக மாட்டான் என்பது முற்றுமுழுதாக தவறான வாதமாகும். இங்கு மனித செயற்பாடுகள் பற்றியே கவனம் செலுத்தப்படுகிறது. அன்றி ஆணோ, பெண்ணோ, இளைஞனோ, யுவதியோ என்பதைப் பற்றி அல்லது என்ற விடயத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். இறைவனின் படைப்பினங்களுடன் மோசமான நடந்துகொண்டால் படைப்பினங்களின் இறைவன் அவனை நிச்சயமாக தண்டிப்பான் என்பது இதன் விளக்கமாகும். பூனைக்கு கொடுமை செய்தால் மாத்திரம் தண்டனை கிடைக்கும். நாயை தொந்தரவு செய்தால் அதற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான் என்பது முற்றாக தவறாகும். பூனையாகவோ, நாயாகவோ இருக்க முடியும். ஆனால், அவை இறைவனின் படைப்பினங்களாகும்.   எந்த மனிதனுக்கும் உயிரினங்களுக்கு அநீதி இழைக்க செய்வதற்கு அருகதையும் கிடையாது என்பது தெளிவு. இந்த விடயங்களைத் தாண்டி கவனம் செலுத்தும் போது மனித குலத்திற்கும், நாகரீகங்களுக்கும், சமூகங்களுக்கும், கலாசாரங்களுக்கும் நாங்கள் மதிப்பளித்து வருகிறோம். இதனால்தான் நாங்கள் மனித உரிமைகளைக் கடந்து உயிரினங்களின் உரிமைகளையும் மதித்து வருகிறோம். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அதற்கான உரிமைகள் காணப்படுகின்றன. ஒரு முஸ்லிம் தன்னைச் சூழவுள்ள அனைத்துப் படைப்பினங்களுக்கும் தன் மூலமான உரிமைகள் வழங்க கடமைப்பட்டுள்ளான் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். மிருகம், மனிதன், கோள்கள் என்பனவற்றின் உரிமைகளை வழங்குவதில் இறைவனுக்கு முன்னாள் மனிதன் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளான் என்பது உறுதியாகிறது. “மனிதர்களில் பெரும்பாலானோர் (அதனை) அதனை அறியமாட்டார்கள்” சூரா அல்-அஃராப் :187 வசனம்

பேராசிரியர் உஸாமா அல் சையித் அல் அஸ்ஹரி 
சிரேஷ்ட விரிவுரையாளர்
அல் -அஸ்ஹர் பல்கலைக்கழகம்
எகிப்து

தமிழாக்கம் - பஸ்ஹான் நவாஸ் - Fazhan Nawas

மனித உரிமைகள் என்ற விடயத்தைத் தாண்டி மிருகங்களின் உரிமைகளுக்காக இன்று குரல் எழுதப்பப்பட்டு வருகிறது. இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகள் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக இமாம் ஷம்ஸ் இப்ன் துலுன் அல் ஹனபி தனது புத்தகத்தில் தனியொரு பகுதியை ஒதுக்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் உற்கார்ந்திருக்கும் போது ஒரு பூனை அவர்களிடம்; வரும். தன்னிடமிருக்கும் பாத்திரத்தில் நீரை அதற்கு குடிப்பதற்காக கொடுக்கும் பழக்கத்தை அவர்கள் வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “இவை உங்கள் மத்தியில் இருக்கின்றன” என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் பூனைகளைப் பற்றி கூறுவார்கள். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்கள் ஒரு நாள் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு விரிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் உற்கார்ந்;திருக்கும் இரண்டு வரிசைகளுக்கு மத்தியில் ஒரு பூனை அங்குமிங்குமாக உலாவிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஒரு மாணவன் பூனையை அழுத்தமாக தள்ளிவிட்டான். இந்தக் காட்சி இமாம் அபுல் பரகாத் அஹமட் அல்தர்தீர் அவர்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியது. பூனையை எடுத்து தனது கதிரைக்கு அருகில் வைத்தார்கள். தான் சாப்பிடும் உணவுவில் இருந்து ஒரு பகுதியை அந்தப் பூனைக்காக வழங்கினார்கள். பின்னர் இமாம் அவர்கள் அதனை தனது மடியில் வைத்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. இதேவேளை, இமாம் அபுல் பரகாத் அவர்கள் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு நுழையும் போது இந்தப் பூனைக்காக ஏதாவது ஒன்றை சாப்பிடக் கொடுத்துவிட்டு செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள். சில நாட்களில் இமாம் அவர்கள் அல் அஸ்ஹருக்குள் நுழையும் போது அவரை 200 பூனைகள் புடை சூழ்ந்து கொண்டன. அவை அனைத்தும் இமாம் அவர்களின் பின்னாள் சுற்றித் திரிந்தன. எனினும், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஆனால், மிருகங்களுக்குக் கூட அன்பு செலுத்துமாறு இஸ்லாம் எமக்குக் கட்டளையிடுகிறது, இந்த நம்பிக்கை முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உயிரினங்களுக்கான உரிமைகளை வழங்குவதிலும், மனித உரிமைகளை வழங்குவதிலும் முஸ்லிம்கள் பின் நிற்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உயிரினங்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென்பது முஸ்லிம்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது. உலகிலுள்ள அனைத்துப் படைப்பினங்களும் இறைவனின் மகத்துவத்துக்கு உரியவையாகும். இதனால் ஒவ்வொரு படைப்பினத்திற்கும் உரிமைகளும், மகத்துவமும் காணப்படுகின்றன. உயிரினங்களுக்கும், மனிதனுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்த இது வழிவகுத்துள்ளது. ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்கள் “உஹத் மலையை நோக்கி “இது எம்மை நேசிக்கின்றது. இதனையும் நாம் நேசிக்கின்றோம்’’ என்று கூறினார்கள். “எவனுக்கும் பயனற்று வாழும் மனிதன் மரணிக்கும் போது வணக்கவாளிகளுக்கு நிம்மதி கிடைக்கிறது. மரங்களும், பூமியும், மிருகங்களும்; இதனால் நிம்மதியடைகின்றன. ஏனெனில் அவனது கரங்களினால் ஏற்படும் பாவங்களுக்காக வணக்கவாளிகளும், பூமியும், மரங்களும், உயிரினங்களும் கவலையடைகின்றன”.

“(அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை. (தப்பிச்செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை” சூறா அத்துகான்: 29ம் வசனம் 

இதனால் தான் சிறந்த மனிதனொருவன் உலகைவிட்டு பிரியும் போது பூமிகளும், வானங்களும் அவனது மறைவிற்காக கண்ணீர் சிந்துகின்றன என்று கூறப்படுகிறது. 

கடந்த கால வரலாறுகளைப் பார்க்கும் போது மிருகங்களுக்காக நீர் அருந்தும் பகுதிகள் நகரங்களில் விஷேடமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. கெய்ரோ நகரிலும் சுத்தமான நீரை அருந்துவதற்காக சதுக்கமொன்று அமைக்கப்பட்டிருந்தது. மனிதர்கள் அருந்துவதற்காக மிக உயரமான பகுதியில் ஒரு நீர் தாங்கி அமைக்கப்பட்டிருந்தது. நீர்; கீழே வரும் போது அது மிருகங்களுக்கு அருந்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. மூன்றாவது படிமுறை பூனை போன்ற சிறு உயிரினங்களுக்கு இலகுவான முறையில் நீரை அருந்துவதற்கான வசதி அதில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நாய், பூனை போன்றவை நீர் அருந்தும் தடாகத்தை சுத்தம் செய்வதற்காக தனி நபரொருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு திறைசேரியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது. இலைகள் போன்ற நீரை மாசுபடுத்தும் பொருட்களை சுத்தப்படுத்துவதற்காக விசேட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அல்-அஸ்ஹர் பலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்துள்ள முஹம்மத் அபு அல் தஹாப் பள்ளிவாசலின்; மினாராவின் உயரமான பகுதியில் பறவைகளுக்கு உணவு அருந்துவதற்கான விசேட பகுதியொன்று அமைக்கப்பட்டிருந்தது. உணவு உட்கொள்வதற்காக உரிமைகளை உயிரினங்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ளமை இதற்கான காரணமாகும்.

(எனது ஆசிரியர்) பேராசிரியர் இமாம் முப்தி அலி ஜூம்மா முஹம்மத் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம்) அவர்களின் ஹதீஸ் தொடர்பான விளக்கங்களை எமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பூனையை கொடுமைப்படுத்தியமையினால் நரகம் சென்ற பெண்ணைப் பற்றி அவர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

இந்த சம்பவம் மக்களின் அறிவிற்கு எட்டும் வகையில் விளங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இது காலம், இடம், நேரம், சந்தர்ப்பம், தனியாள் என்பனவற்றுக்கு ஏற்ற வகையில் பொருந்தக்கூடியதென்று இமாம் அல் கராபி அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த ஹதீஸ் பெண்களுக்கு மாத்திரம் பொருத்தமானதல்ல. தண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றியே இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஓர் ஆண் உயிரினத்தின் மீது அநீதி இழைத்தால் அவன் தண்டனைக்கு உள்ளாக மாட்டான் என்பது முற்றுமுழுதாக தவறான வாதமாகும். இங்கு மனித செயற்பாடுகள் பற்றியே கவனம் செலுத்தப்படுகிறது. அன்றி ஆணோ, பெண்ணோ, இளைஞனோ, யுவதியோ என்பதைப் பற்றி அல்லது என்ற விடயத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். இறைவனின் படைப்பினங்களுடன் மோசமான நடந்துகொண்டால் படைப்பினங்களின் இறைவன் அவனை நிச்சயமாக தண்டிப்பான் என்பது இதன் விளக்கமாகும். பூனைக்கு கொடுமை செய்தால் மாத்திரம் தண்டனை கிடைக்கும். நாயை தொந்தரவு செய்தால் அதற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான் என்பது முற்றாக தவறாகும். பூனையாகவோ, நாயாகவோ இருக்க முடியும். ஆனால், அவை இறைவனின் படைப்பினங்களாகும். 

எந்த மனிதனுக்கும் உயிரினங்களுக்கு அநீதி இழைக்க செய்வதற்கு அருகதையும் கிடையாது என்பது தெளிவு. இந்த விடயங்களைத் தாண்டி கவனம் செலுத்தும் போது மனித குலத்திற்கும், நாகரீகங்களுக்கும், சமூகங்களுக்கும், கலாசாரங்களுக்கும் நாங்கள் மதிப்பளித்து வருகிறோம். இதனால்தான் நாங்கள் மனித உரிமைகளைக் கடந்து உயிரினங்களின் உரிமைகளையும் மதித்து வருகிறோம். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அதற்கான உரிமைகள் காணப்படுகின்றன. ஒரு முஸ்லிம் தன்னைச் சூழவுள்ள அனைத்துப் படைப்பினங்களுக்கும் தன் மூலமான உரிமைகள் வழங்க கடமைப்பட்டுள்ளான் என்பதை முஸ்லிம்கள் அறிந்து வைத்துள்ளார்கள். மிருகம், மனிதன், கோள்கள் என்பனவற்றின் உரிமைகளை வழங்குவதில் இறைவனுக்கு முன்னாள் மனிதன் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளான் என்பது உறுதியாகிறது. “மனிதர்களில் பெரும்பாலானோர் (அதனை) அதனை அறியமாட்டார்கள்” சூரா அல்-அஃராப் :187 வசனம்

                                                            சேவலின் சிறப்பு

 

அகமியத்திற்காக -பின்து அப்திர்ரஸ்ஸாக்.


சேவல் என்பது பல சிறப்புத்தன்மைகளையுடைதாக இருக்கின்றது. அதைப்பற்றி நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியிருக்கின்றார்கள்.


சேவலை நீங்கள் ஏசாதீர்கள். நிச்சயமாக அது தொழுகைக்காக (மக்களை) எழுப்புகின்றது.

சேவலானது புத்தி கதிப்புடையதாகும். அல்லாஹ்வை அதிகம் “திக்ர்”செய்யும். அதன் கண்கள் உறங்கும் ஆனால் அதன் கல்பு உறங்காது.மேலும் அது தொழுகையின் வக்துக்களை அறியும்.

“வெள்ளைச் சேவலாகிறது எனக்குதோழனாய் இருக்குமென்றும், அது தனது வீட்டையும் சூழலிலுள்ள 16 வீடுகளையும் பாதுகாத்துக்கொள்ளுமென்றும், நீங்கள் சேவலுடைய சத்தத்தைக் கேட்டீர்களென்றால் அல்லாஹுத்தஆலாவிடம் அவனுடைய வருசையில் நின்றும் கேட்டுக்கொள்ளுங்கள் ஏனென்றால் அது ஒரு மலக்கைக் காணுகின்றது. 

கழுதை ஓலமிடுவதை கேட்டீர்களென்றால் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல்தேடிக்கொள்ளுங்கள் ஏனெனில் கழுதை ஷைதானைக்கானுகின்றது”. நபிகள் நாயகம் முஹம்மத் ஸல் அவர்கள், கூறினார்கள். 

சேவலின் மருத்துவக்குணங்கள் 

அதன் இரத்தம் அல்லது மூலையை பூச்சி ,விசஜந்துக்கள் தீண்டிய இடத்தில் பூசினால் சுகமுண்டாகும். 

அதன் இரத்தத்தை கண்ணில் அஞ்சனமிட்டால் கண்ணிலுள்ள வெள்ளையை போக்கிவைக்கும். 

அதன் பூவை கரித்து படுக்கையில் மோலுகின்ற(சிறு நீர் கழிக்கின்ற) சிரார்களுக்கு குடிப்பாட்டினால் பயன்கிடைக்கும். 

அதன் வலது இறக்கையினுடைய எலும்பை விடாத ஜுரத்திற்கும், இடது இறக்கையினுடைய எலும்பை நான்காமுறைக் காய்ச்சலுக்கும் கட்டிக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். 

கர்ப்பம் தரிக்காத பெண் சேவலின் விதையைச் சுட்டு மாதவிடாய் நிகழ்ந்து துப்பரவாகுவதற்கு மூன்று நாட்களின் முன் சாப்பிட்டு கணவனுடன் சேர்ந்தால் அல்லாஹ்வின் நாட்டத்துடன் கர்ப்பமாவாள். 

பைத்தியக்காரனுக்கு வெள்ளை நிறம் அல்லது சிவப்பு நிறமுடைய சாவலின் பூவை புகைப்போட்டால் புதுமையான முறையில் அவனது பைத்தியம் நீங்கப்பெறுவான். 

அதன் பித்தைசெம்மறி ஆட்டின் கறியுடன் வெறும் வயிற்றில் குடித்தால் மறதி ஏற்படாது. 

கனவில் சேவலைக் காண்டால்.​ 
கனவில் சேவலைக்கண்டால் கத்தீப், முஅத்தின், காரீ போன்றோரைக்குறிக்கும். 


நல்லவர்கள் பேரிலும் செய்தி அறிவிக்கின்றதாயிருக்கும். 


சிலவேளைகளில் அதிகம் திருமணம் முடிக்கின்றவன் பேரிலும் சுட்டிக்காட்டும். 

இப்னு சீரீன் (றஹ்) அவர்களிடம் ஒரு மனிதன் வந்து “என் வீட்டில் ஒரு சாவல் வந்து புகுந்து கோதுமை வித்துகளை பொறிக்கித்திண்ணக் கன்டேன் என்று கூறினார். 

அப்போது அவர்கள் “உனக்கு களவுபோகும்” உன்பொருள் களவு போனால் எனக்கு அறிவி என்றார்கள். சில நாட்கள் கழித்து அம்மனிதன் வந்து நாயகமே! என் வீட்டில் இருந்த எனது விருப்பைக்காணவில்லை என்றான். அதை முஅத்தின் திருடியிருக்கின்றான். என்று இப்னு சீரீன் றஹ் அவர்கள் கூற முஅத்தினிடம் சென்று விரிப்பைக்கேட்டுப்பெற்றான்.

 அல்லாஹ் ஒவ்வொரு படைப்பிலும் ஒவ்வொரு வகையான தனிச்சிறப்பை வைத்துள்ளான். அதிலும் விஷேடமாக சேவலில் பல சிறப்புத்தன்மைகளை இயற்கையாய் வைத்திருக்கின்றான்.சேவலை அறுத்து எமது நாவுக்கு ருசியாக்கும் ஒவ்வொருவரும் அதைப்பற்றிய நாயகத்தின் நன்மொழிகளை உற்றாய்வு செய்தால் சிலவேளைகளில் ஏன் நாம் அறுத்துச்சாப்பிடுகின்றோம்?? என்றும் எண்ணக்கூடும். 

அதன் விஷேட தன்மைகளை புரிந்துகொள்ள இந்த நபிமொழி மட்டுமே போதுமானதாகும். 

அர்சுக்கு கீழ் இரத்தினங்களால் இரகுள்ள ஒரு சேவல் இருக்கின்றது. அது எல்லா “சஹருடைய” நேரத்திலும் பாங்குசொல்லுகின்றது. அதன் சப்தத்தை இன்ஸ் ஜின்னினத்தை தவிர வானத்திலுள்ளவர்களும், பூமியிலுள்ளவையும் கேட்பார்கள். பூமியிலுள்ள சேவல்களும் அதன் சப்தம் கேட்டு சப்தமிடுகின்றன. என நபி மணி (ஸல்) அவர்கள் திருவுளமானார்கள். 

அறபிமொழியில் “தீக்” என்று சேவலுக்கும், “தஜாஜஹ்” என்று கோழிக்கும் சொல்லப்படும்.

-முற்றும்-

 

கப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.

 


-மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)-

கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பவேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான்.
(ஸாதுல் மஆத் – பக்கம் 661).

இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ், அல் இஜ்மாஉ,அல்கியாஸ் ஆகிய நான்கு மூலாதாரங்களின் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு படித்தவர்களும் பாமரர்களும் கப்றுகளை உடைத்தெறியவேண்டும் எனகோஷமிடுகின்றனர்.

அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில்

ومن يعظـّـم شعائِر الله فإنـّـها من تقوى القلوب (حج – 32)

“யார் அல்லாஹ்வின் சின்னங்களைகண்ணியம்செய்கின்றானோ அது இறையச்சத்தில் நின்றுமுள்ளது” என கூறுகின்றான்.(ஹஜ்-32)
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் சின்னம் என்பது அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடியதை குறிக்கின்றது. எந்த வஸ்து அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறதோ அது அல்லாஹ்வின் சின்னம் ஆகும்.

இந்த அடிப்டையில்

انّ الصفا والمروة من شعائِر الله (البقرة-158

ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின்சின்னங்களில் நின்றுமுள்வையாகும்.
( அல்பகறஹ்-158)
وَالْبُدْنَجَعَلْنَاهَالَكُمْمِّنشَعَائِرِاللَّهِ(الحج:36)

உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளை நாம் அல்லாஹ்வின்சின்னங்களில் நின்றுமுள்வையாக ஆக்கியுள்ளோம்.(ஹஜ்-36)

மேற்குறிப்பிடப்பட்ட திருவசனங்களில் ஸபாவும் மர்வாவும் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணிகளும் அல்லாஹ்வின் சின்னங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இவை கண்ணியம்செய்யப்படவேண்டிவையாகும்.

கஃபதுல்லாஹ்,ஹஜறுல் அஸ்வத், ஸபா,மர்வா,மினா, அறபஹ் போன்ற புனித தலங்கள் அல்லாஹ்வின் சின்னங்கள் ஆகும். இவை கண்ணியம் செய்யப்படவேண்டிவையுமாகும்.

ஆயினும் இவையாவும் கல்லினாலும் மண்ணினாலும் படைக்கப்பட்டவையாகும். இருப்பினும் அல்லாஹ்வின்சின்னங்கள் என்ற அடிப்படையில் அவை கண்ணியம் செய்யப்படுகின்றன.

உதாரணமாக கஃபதுல்லாஹ்வுக்குபோர்வைபோர்த்துதல்,ஹஜறுல் அஸ்வத் கல்லைமுத்தமிடுதல்போன்று.

அவ்வாறாயின் அல்லாஹ்வின் பெரியசின்னங்களான அவனது தூதை கொண்டுவந்த நபீமார்கள்,அவர்களின் வாரிசுகளான வலீமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதை நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.

அதபோல் உழ்ஹிய்யஹ்வுக்காக எடுத்துச்செல்லப்படும் பிராணி என்ற காரணத்தினால் குறித்த பிராணிஅல்லாஹ்வின்சின்னம் என்றாகிறது. அதன் காரணமாக கண்ணியம் செய்யப்படுகின்றது. அவ்வாறாயின் நபீமார்கள், வலீமார்கள் எந்த அளவு கண்ணியம் செய்யப்பவேண்டியவர்கள் என்பதையும் நாம் இங்கு சிந்திக்கவேண்டும்.

இந்த அடிப்டையில் நாம் பார்க்கும்போது நபீமார்கள், வலீமார்கள் வாழும் கப்றுகளை அழகாக கட்டுவதும், அவற்றை சுத்தமாகவைத்திருப்பதும்தான் அவர்களுக்குசெய்யும் கண்ணியமே தவிர அவர்களின் கப்றுகளை உடைப்பதும் அவற்றை அசுத்தப்படுத்துவதும் அவர்களுக்குசெய்யும் கண்ணியம் அல்ல.

கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள்,நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்றும் கப்றுகளின் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமென்றும் கூறுபவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் ​கொண்டு அவ்வாறு கூறுகின்றனர் காரணம் இந்த ஹதீதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டமையாகும்

بابالأمربتسويةالقبر 

ـحدّثنايَحْيَىبْنُيَحْيَىوَأَبُوبَكْرِبْنُأَبِيشَيْبَةَوَزُهَيْرُبْنُحَرْبٍقَالَيَحْيَى: أَخْبَرَنَا. وَقَالَالآخَرَانِ: حَدَّثَنَاوَكِيعٌعَنْسُفْيَانَ،عَنْحَبِيبِبْنِأَبِيثَابِتٍ،عَنْأَبِيوَائِلٍعَنْأَبِيالْهَيَّاجِالأَسْدِيِّقَالَ: قَالَلِيعَلِيُّبْنُأَبِيطَالِبٍ، : أَلاَّأَبْعَثُكَعَلَىمَابَعَثَنِيعَلَيْهِرَسُولُاللّهِ؟أَنْلاَتَدَعَتِمثْالاًإِلاَّطَمَسْتَهُ. وَلاَقَبْراًمُشْرِفاًإِلاَّسَوَّيْتَهُ 

அபுல் ஹய்யாஜ் அல் அஸதீ(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் அலீ இப்னு அபீதாலிப்(றழி) அவர்கள் எனக்கு கூறினார்கள். என்னை நபீ(ஸல்) அவர்கள் அனுப்பிய விடயத்தின் மீது நான் உன்னை அனுப்புகிறேன்.”விக்கிரகங்களை அழிக்காமல் விட்டு விடாதே,உயர்ந்துள்ள கப்றுகளை சீராக்காமல் விட்டு விடாதே” 
ஆதாரம் – முஸ்லிம் 
ஹதீஸ் இலக்கம் – 2196 

இந்த ஹதீஸ் துர்முதீ-1043,முஸ்னத் அஹ்மத்-1067,நஸாயீ-2031, ஸூனன் அபூதாவூத்-3220 ஆகிய இடங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இந்த ஹதீதில் கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென கூறப்படவில்லை. 

இந்த ஹதீதில் இடம்பெற்றுள்ள سَوَّيْتَهஎன்றசொல்லுக்கு“உடைத்தல்”அல்லது “தகர்த்தல்” என தவறாக பொருள்கொள்வதே கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென சிலர் கூறுவதற்கு காரணமாகும். இந்த சொல் تسوية என்றசொல்லடியில் இருந்து வந்ததாகும்.تسوية என்றால் “சீராக்குதல்” அல்லது”செம்மையாக்குதல்” என்பது கருத்தாகும். இந்தக்கருத்தின் அடிப்படையிலேயே அறபுமொழி நடையில் இது பாவிக்கப்படுகின்றது. تسوية என்றசொல் “உடைத்தல்” அல்லது “தகர்த்தல்” என்ற பொருளில் அறபுமொழி நடையில் எந்த இடத்திலும் பாவிக்கப்படவில்லை. 

கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பதுதான்மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்து என்றிருந்தால் ஹதீதின் வசனம் (وَلاَقَبْراًمُشْرِفاًإِلاَّسَوَّيْتَهُ (بالارض “உயர்ந்துள்ள கப்றுகளை (பூமியுடன்) சீராக்காமல் விட்டு விடாதே”என வந்திருக்கவேண்டும். அவ்வாறு ஹதீதில் வரவில்லை. எனவே இந்த ஹதீதின் சரியானபொருள் என்னவென்பதை ஹதீஸ் விரிவுரையாளர்களின் கருத்துக்களிலிருந்து நாம் நோக்குவோம். இமாம் நவவீ(றஹ்) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையில் கூறுகின்றார்கள் 


قوله: (يأمربتسويتها). وفيالروايةالأخرى: ولاقبراًمشرفاًإلاسويته. فيهأنالسنةأنالقبرلايرفععلىالأرضرفعاًكثيراًولايسنمبليرفعنحوشبرويسطحوهذامذهبالشافعيومنوافقه، 

“கப்றுகள் பூமி மட்டத்திலிருந்து அதிகமாக உயர்தப்படமாட்டாது, திமில் போன்ற வடிவத்திலும்அமைக்கப்படமாட்டாது.ஆனால் ஒரு சாண் அளவு உயர்த்தப்படும் அத்துடன் (தட்டையான) முகடு அமைக்கப்படும்.இதுவே இமாம் ஷாபிஈ(றஹ்) அவர்களின் மத்ஹப் ஆகும்.”
(ஷறஹுந்நவவீ -பாகம்07,பக்கம்32)

இமாம் கஸ்தல்லானீ(றஹ்) இர்ஷாதுஸ்ஸாரீ எனும் ஸஹீஹுல் புஹாரீ விரிவுரையில்கூறுகின்றார்கள்

لأنـّه لم يرد تسويته بالارض وإنـّما اراد تسطيحه 

“கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்பது ஹதீதின் நோக்கமல்ல.(தட்டையான)முகடு அமைக்கப்படுவதே ஹதீதின் நோக்கமாகும்”
(இர்ஷாதுஸ்ஸாரீ பாகம் 02, பக்கம் 477)

மேலும் குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம் முஸ்லிம், இமாம் துர்முதீ,இமாம் நஸாயீ,இமாம் அபூதாவூத் ஆகியோர் இந்த ஹதீதைبابالأمربتسويةالقبر

“கப்றை சீராக்குமாறு அல்லது செம்மையாக்குமாறு கட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்களே தவிர

وهدمهاباب الامر بتخريب القبور

“கப்றுகளை உடைத்துவிடுமாறுகட்டளையிடும் பாடம்” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்யவில்லை.

எனவே குறித்த ஹதீதை பதிவுசெய்த இமாம்கள் கப்றுகள் உடைக்கப்பவேண்டும் அல்லது கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும் என்ற கருத்திலுள்ளவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

மேலும் அல்பிக்ஹு அலல் மதாஹிபில் அர்பஅஹ் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

الفقهعَلَى المَذاهب الأرْبَعَة ويندب ارتفاع التراب فوق القبر بقدر شبر، ويجعل كسنام البعير، باتفاق ثلاثة، وقال الشافعية: جعل التراب مستوياً منظماً أفضل من كونه كسنام البعير،

ஹனபீ,மாலிகீ,ஹன்பலீ ஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி “கப்றுக்குமேல் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படுவதும் அது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதும் ஸுன்னத்தாகும்”.

ஷாபிஈ மத்ஹபின் கருத்தின்படி “கப்றின் மண் ஒழுங்காகவும் சீரானதாகவும் ஆக்கப்படுவது ஒட்டகத்தின் திமில் போன்ற வடிவத்தில் அமைக்கப்படுவதை விட சிறப்பானதாகும்”

மேற்குறிப்பிடப்பட்ட விபரங்களின் படி “கப்றுகள் பூமியின் மட்டத்திற்கு சமனாக ஆக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் “கப்றுகள் உடைக்கப்படவேண்டும்” என்ற கருத்தும் தவறானது என்பது தெளிவாகின்றது. அத்துடன் கப்றுகளின் மண் ஒரு சாண் அளவு உயர்தப்படவேண்டும் என்பதுவே ஹதீஸ் கலை இமாம்களினதும்,மத்ஹபுடைய இமாம்களினதும் தெளிவான முடிவாகும் என்பதும் எமக்கு தெளிவாகின்றது.

நபி(ஸல்) அவர்களின் புனித கப்று எவ்வாறு அமைந்திருந்தது என்பதை பின் வரும் ஹதீதின் மூலம் புரிந்துகொள்ளமுடியும்.


ـحدثناأَحْمَدُبنُصَالِححدثناابنُفدَيْكٍأخبرنيعَمْرُوبنُعُثْمَانَبنِهَانىءٍعنالْقَاسِمِ،قال: دَخَلْتُعَلَىعَائِشَةَفَقُلْتُ: يَاأُمَّهْاكْشِفِيلِيعَنْقَبْرِرَسُولِاللهصلىاللهعليهوسلّموَصَاحِبَيْهِرَضِيَاللهعَنْهُمَافَكَشَفَتْلِيعَنْثَلاَثَةِقُبُورٍلاَمُشْرِفَةٍوَلاَلاَطِئَةٍ،مَبْطُوحَةٍبِبَطْحَاءِالْعَرْصَةِالْحَمْرَاءِ. قالأبُوعَلِيٍّ: يُقَالُإنَّرَسُولَاللهصلىاللهعليهوسلّممُقَدَّمٌوَأبُوبَكْرٍعِنْدَرَأْسِهِوَعُمَرُعِنْدَرِجْلَيْهِرَأْسُهُعِنْدَرِجْلَيْرَسُولِاللهصلىاللهعليهوسلّم

காஸிம் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.நான் ஆயிஷா(றழி) அவர்களின் வீட்டுக்கு நான் சென்றேன். நபி(ஸல்) அவர்களின் புனித கப்றையும் அவர்களின்தோழர்கள் இருவரின் கப்றுகளையும் திறந்து காட்டுமாறுகேட்டுக்கொண்டேன்.அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவை அதிக உயரமாவையாகவு மிருக்கவில்லை,பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் முற்டுத்தப்பட்டவர்களகவும் அபூபக்ர்ஸித்தீக்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலைக்கு நேராகவும் உமர்(றழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் கால்களுக்குநேராகவும் அடக்கம்செய்யப்பட்டிருந்தனர் என கூறப்படுவதாக அபூ அலீ (றழி) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் – ஸுனன் அபூதாவூத் 
ஹதீஸ் இலக்கம் – 3222 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதில் நபி(ஸல்) அவர்களினதும் அவர்களின் தோழர்களான அபூபக்ர்ஸித்தீக்(றழி), உமர்(றழி) ஆகிய இருவரினதும் புனித கப்றுகள் “அதிக உயரமாவையாகவுமிருக்கவில்லை,பூமியுடன் சமனானதாகவுமிருக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. எனவே சாதாரண உயரத்துடன் காணப்பட்டன என்பதும். குறிப்பாக அவை பூமியுடன் சமனானதாக இருக்கவில்லை என்பதும் தரைமட்டமானதாக இருக்கவுமில்லை என்பதும் தெளிவாகின்றது.

கப்றுகள் பூமியுடன் சமனானதாகத்தான் அமைக்கப்படவேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் கட்டளையாக இருந்தால் ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களினதும், அவர்களின் இருதோழர்களினதும் புனித கப்றுகளை பூமியுடன் சமனானதாக அல்லது தரைமட்டமானதாக ஆக்கியிருப்பார்கள். அவ்வாறில்லையாதலால் அவற்றை சாதாரண உயரமானவையாக அமைத்திருந்தார்கள்.

கப்றுகளை சூழ கட்டடங்கள்,நிழல்தரும் கூரைகள் அமைப்பது ஹறாம் என்றுசொல்பவர்கள் பின்வரும்ஹதீதை ஆதாரமாகக்கொள்வதுண்டு.


ـحدّثناأَبُوبَكْرِبْنُأَبِيشَيْبَةَحَدَّثَنَاحَفْصُبْنُغِياثٍعَنِابْنِجُرَيْجٍ،عَنْأَبِيالزُّبَيْرِ. عَنْجَابِرٍ،قَالَ: نَهَىرَسُولُاللّهِأَنْيُجَصَّصَالْقَبْرُوَأَنْيُقْعَدَعَلَيْهِ . وَأَنْيُبْنَىعَلَيْهِ.

கப்றின் மீது சாந்து பூசுவதையும் அதன்மீது அமர்தையும் அதன் மீது கட்டுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
ஆதாரம் – முஸ்லிம் 
ஹதீஸ் இலக்கம் – 2198 
அறிவிப்பு – ஜாபிர்(றழி) 

மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதின் கருத்தை தரக்கூடிய பலஹதீதுகள் துர்முதீ,இப்னுமாஜஹ்,நஸாயீ, முஸ்னத்அஹ்மத் போன்ற ஹதீஸ்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீதை அடிப்டையாகக் கொண்டு கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என சிலர் கூறுகின்றனர்.

இங்கு நபி(ஸல்) அவர்கள்சாந்து பூசுதையும்,கட்டுவதையும் தடுத்துள்ளது ஹறாம் என்ற அடிப்படையில் அல்ல. மக்றூஹ் என்ற அடிப்டையில்தான். என்பதை ஹதீஸ் வரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். காரணம் இமாம் துர்முதீ(றஹ்) அவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட ஹதீதை

بابُمَاجَاءَفيكَرَاهِيَةِتَجْصِيِصالْقُبُور

“கப்றின் மீது சாந்து பூசுவது மக்றூஹ் என்பதில் தொடர்பானது” என்ற தலைப்பின் கீழ் பதிவுசெய்துள்ளார்கள்.

எனவே இமாம் துர்முதீ(றஹ்) அவர்கள் இந்த விடயத்தை மக்றூஹ்என குறிப்பிட்டுள்ளார்களே தவிர ஹறாம் என்று குறிப்பிடவில்லை.

ஒரு ஹதீதை விளங்கும்போது அந்த ஹதீதை பதிவுசெய்த இமாமின் கருத்து முக்கியத்துவம்பெறுகின்றது. காரணம் அவர்கள் ஹதீஸ் அறிவிப்பாளரிடம் இருந்து ஹதீதைபெற்றவர்கள். எந்த சூழலில் எந்தக்காரணத்திற்காக குறித்த ஹதீதை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்பதைகேட்டறிந்தவர்கள். குறித்த ஹதீதை ஒத்த பல்வேறு ஹதீஸ்களை அறிந்தவர்கள்.குறித்த ஹதீதை அடிப்டையாகக் கொண்ட ஸஹாபாக்களின் நடைமுறையை புரிந்தவர்கள். எனவே அவர்களின் கருத்து முக்கியத்துவம்பெறுகின்றது.

இந்த அடிப்டையில் மத்ஹபுடைய இமாம்களின் கருத்தும் முக்கியமானதாகும்.காரணம் இவர்கள் ஹதீதுடைய இமாம்களுக்கு முற்பட்டவர்கள். ஹதீஸ்கள் தொடர்பானமேற்கூறப்பட்ட விடயங்ளை நன்கறிந்தவர்கள்.

எனவே,ஷாபிஈ,ஹனபீ,மாலிகீஆகிய மூன்று மத்ஹபுகளின் கருத்தின்படி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும். அது பொதுமையவாடியாக இருந்தால் ஹறாம் ஆகும்.

ஹன்பலீ மத்ஹபின் கருத்தின்படிபொதுமையவாடியாக இருந்தாலும் சரி வேறு இடமாக இருந்தாலும் சரி கப்றை சூழ கட்டடங்கள் அமைப்பது மக்றூஹாகும்.

இந்த அடிப்டையில்தான் ஸஹாபாக்கள் மேற்குறித் ஹதீதை விளங்கி நடை முறைப்படுத்தினர்.

நபி(ஸல்) அவர்கள் மரணித்த போது ஸஹாபாக்கள் அவர்களின் திருவுடலை ஆயிஷா(றழி) அவர்களின் வீட்டில் நல்லடக்கம்செய்தனர்.

நபி(ஸல்) அவர்கள், கப்றை சூழ கட்டடம் கட்டுவது ஹறாம் என்றுசொல்லியிருந்தால் நபி(ஸல்)அவர்களின் திருவுடலை கட்டப்பட்ட வீட்டினுள் எவ்வாறு நல்லடக்கம்செய்ய முடியும்?.

கட்டப்பட்ட கட்டடத்தினுள் நல்லடக்கம்செய்வதோ அல்லது நல்லடக்கம்செய்துவிட்டு கட்டடம் அமைப்பதோ ஹறாம் அல்ல என்ற காரணத்தினால்தான் ஸஹாபாக்கள் அவ்வாறுசெய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களை மாத்திரமல்ல அவர்களின் தோழர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபா ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக்(றழி) அவர்களையும்,இரண்டாம் கலீபா ஹஸ்ரத் உமர்(றழி) அவர்களையும் இவ்வாறேநபி(ஸல்) அவர்களுக் அருகில் கட்டப்பட்ட வீட்டினுள்ஸஹாபாக்கள்நல்லடக்கம்செய்தார்கள்.

கப்றுகளை சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள்,நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்படவேண்டும் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் கட்டளை என்றிருந்தால் ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் இரு தோழர்களையும் கட்டப்பட்ட வீட்டினுள்நல்லடக்கம் செய்திருக்கமாட்டார்கள்.

எனவே ஸஹாபாக்கள், கப்றுகள் உடைக்கப்படவேண்டுமென்ற கொள்கையிலுள்ளவர்கள் அல்ல. கப்றுகள் உடைத்து தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.
 

 

    உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகளில் நபீ (முஹம்மது (ஸல்) அவர்களே அதி உயர்ந்தவர்கள்! 

     (2006ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிய அல்மிஷ்காத் பத்திரிகைக்கு மௌலவி. இப்றாஹிம் நத்வி அவர்கள் எழுதிய கட்டுரை) 


உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகளில் நபீ (முஹம்மது (ஸல்) அவர்களே அதி உயர்ந்தவர்கள்!  அதேபோல் அவர்களது “உம்மத்” சமூகமே அனைத்து சமூகங்களிலும் உயர்ந்தது! நபீமார்களில் பலர் நமது நபீயின் சமூகத்தில் தோன்றவே விரும்பினர். 

உலக மக்களில் றஸூல்மார்கள் நபீமார்களே உயர்ந்தவர்களாவர். அவர்களில் எங்கள் கண்மணி முஹம்மது (ஸல்) அவர்களேயே அல்லாஹ்தஆலா அதி உயர்ந்தவர்களாயும்அதி சிறப்படையவர்களாயும் ஆக்கியுள்ளான். எந்த நபிமாருக்கும் றஸுல்மாருக்கும் கொடுக்காத அந்தஸ்த்தை எங்கள் நபீக்கு இறைவன் வழங்கியுள்ளான். 
அதேபோல் எங்கள் நபியின் பொருட்டால் எந்த நபிமாரின் உம்மத் சமூகத்தவருக்கும் வழங்கியிராத மாண்பை அவர்களின் உத்தம் சமூகத்தினரான எங்களுக்கு இறைவன் வழங்கியுள்ளான் அனைத்து சமூகத்தவரிலும் எங்களையே இறைவன் மேம்படுத்தியுள்ளான். இக்கட்டுரையில் எங்கள் மாநபி அவர்களின் மாண்பையும் அவர்களது உம்மத் சமூகத்தவரின் மாண்பையும் ஆயாந்தோதுவதே நோக்கமாகும். 

மூஸா நபியின் வினாக்களும் இறைவனின் விடைகளும் 
வினாவிடை 1
நபி மூஸா (அலை)அவர்கள் இறைவனிடத்திலே கேட்கிறார்கள் “இறைவா நான் வேத ஏடுகளில் ஒரு உம்மத் சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் மற்றவருக்கு உன்னிடத்தில் சிபார்சு செய்பவர்களாகவும் சிபார்சு செய்யப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் அவர்களை எனது உம்மத் சமூகத்தவராக ஆக்கிவிடு என்று!” 

அதற்கு இறைவன் அவர்கள் நபி முகம்மத் ஸல்லள்ளாகு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தாவர் என்று பதிலளித்தான். 

வினா விடை 2 
மூஸா : இறைவா நான் ஏடுகளில் பார்க்கிறேன் ஒரு சமூகம் செய்யும் குற்றங்களுக்கு பரிகாரமாக ஐவேளை தொழுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை எனது சமூகமாக ஆக்கிவிடு. 

இறைவன்: அது முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர். 

வினாவிடை 3 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தினரைப்பார்க்கின்றேன் அவர்கள் வழிகேடர்களுடன்போர் செய்வார்கள் அவர்களே குருடனான தஜ்ஜாலையும் கொல்வார்கள் அவர்களை எனது உம்மத் ஆக ஆக்கிவிடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்தினர்! 

வினாவிடை 4 
மூஸா : இறைவா நான் ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் தண்ணீராலும் மண்ணாலும் சுத்தம் செய்கிறார்கள் அவர்களை எனது சமூகமாக ஆக்கி விடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர். 

வினாவிடை 5 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் சதகஹ் (ஏழைவரி) களை எடுக்கிறார்கள் அதைச் சாப்பிடுகிறார்கள் முன் வந்த சமூகத்தவர் அதை நெருப்பினால் எரித்துவிடுபவர்களாக இருந்தார்கள் சதகஹ்வை எடுத்து சாப்பிடுபவர்களை எனது சமூகத்தவராக ஆக்கிவிடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 6 
மூஸா : இறைவா! நான் ஏடுகளில் ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் ஒரு நன்மையைச் செய்ய நாடுகிறார்கள் ஆனால் செய்யவில்லை அதற்காக அவர்களுக்கு ஒரு நன்மை எழுதப்படுகின்றது. அதை செய்தால் பத்துத்தொடக்கம் எழுநூறுக்கு மேற்பட்ட நன்மைகள் அவர்களுக்கு எழுதப்படுகின்றன. அதேபோல் அவர்கள் ஒரு தீமையை நாடினார்கள் செய்யவில்லை. அதற்காக எத்தீமையையும் அவர்களுக்கு எழுதப்படுவதில்லை. அவர்கள் ஒரு தீமை செய்தால் ஒரு தீமையே அவர்களுக்கு எழுதப்படுகின்றது. இவர்களை எனது உம்மத்தாக ஆக்கு! 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 7 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்களில் எழுபதாயிரம் பேர் கேள்விகள் இல்லாமலேயே சுவர்கம் புகுதுகின்றனர். அவர்களை எனது சமூகமாக ஆக்கு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள் 

வினாவிடை 8 
இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் உலகில் வந்த அனைத்து சமூகத்தவரிலும் சிறந்தவர்கள் அவர்கள் நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள் தீமையை விளக்குகிறார்கள் அவர்களை எனது சமூகமாக்கு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 9 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்களே இறுதியானவர்கள் மறுமைநாளில் அவர்களே முந்தியவர்கள் அவர்களை எனது சமூகமாக ஆக்கு? 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 10 
மூஸா : இறைவா ஒரு கூட்டத்தைக் கண்டென் அவர்களின் வேதம் அவர்களது நெஞ்சத்திலிருக்கும். அவர்களை எனது சமூகமாக ஆக்கு! 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

மேற்கண்டவாறு மூஸா நபீக்கும் அல்லாஹ்க்குமிடையே வினாவிடை தொடர்ந்து இறுதியில் மூஸா நபீ இறைவனிடம் ‘என்னையும் அந்த முஹம்மதின் சமூகத்தில் ஒருவராக ஆக்கிவிடு என்று கேட்டார்கள். 

அதனைக்கேட்டு மகிழ்ந்த இறைவன் “மூஸாவே உன்னை நான் எனது ‘ரிஸாலத்’ இறை தூதைத் கொண்டும், ‘கலாம்’ என்ற பேச்சைக் கொண்டும் உன்னை நான் தேர்ந்துவிட்டேன். உனக்கு நான் தருவதை எடுத்துக்கொள். நன்றியுடையோர்களில் ஒருவனாக ஆகிவிடு என்று சொன்னான். அதை மூஸா (அலை) அவர்கள் பொருந்திக் கொண்டார்கள். 

இறைவனுக்கும் மூஸா நபிக்கும் நடந்த இவ்வுரையாடலில் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூகத்தவரின் பெருமாண்பு எத்தகு நிலையுடையதாக இருக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

‘மிஹ்ராஜ்’ விண்ணுலக யாத்திரையின்போது வானவர்கோன் ஹழ்றத் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் மாநபி (ஸல்) அவர்கள் தமது உடலால் யாத்திரை செய்து எழு வானங்களைக் கடந்து ‘சித்றதில் முன்தஹா’ என்ற இறுதி எல்லையை அடைந்தார்கள். அப்போது ஜீப்ரீல் ‘அல்லாஹ்வின் தூதரே, முஹம்மதே செல்லூங்கள் என்றார்கள் அதற்கு மாநபீகள் நீங்கள் முதலில் புகுங்கள் என்றார்கள் 

அது கேட்ட ஜிப்ரீல், இந்த இடத்தைத் தாண்டுவதற்கு உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது! நானாயினும் சரியே இதில் நான் ஒரு விரலளவு புகுந்தாலும் எரிந்து விடுவேன். நீங்களே இறைவனுக்கு மிக சங்கையானவர்கள். உட்புகுந்து செல்லுங்கள் என்றார்கள். நபீகள சென்றார்கள். 

‘நபீகளை விட ஜிப்ரீலே உயர்ந்தவர்’ என்ற முஃதஸிலாக்களின் வாதம் இவ்வரலாறின் மூலம் உடைந்து விடுகிறது. 

ஒளியினால் படைக்கப்பட்ட ஜீப்ரில் (அலை) அவர்களே எரிந்து விடுவார்களாயின் மனிதனுக்குப் பிறந்த முஹம்மது (ஸல்) அவர்களின் நிலை எத்தகு மகத்துவம் பொருந்தியதாகிவிட்டது . நபீகள் (ஸல்) அவர்களை நம்போன்ற சாதாரண மனிதனாகக் கருதுவோருக்கு இவ்வரலாறு சாட்டையடியாகும். 

நபீகள் நாயகம் சொன்னதாக ஹழ்றத் அபூஹூறைறஹ் (றழி) சொல்கிறார்கள் எனக்கு இறைவனால் ஐந்து விடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

1. நான் எல்லா மக்களுக்குமான றஸூலாக அனுப்பப்பட்டுள்ளேன். 

2. பூமி எனக்கு ‘மஸ்ஜித்’ சுஜூது செய்யும் இடமாகவும், சுத்தமானதாகவுமே ஆக்கப்பட்டுள்ளது. 

3.ஒரு மாத தொலைதூரம் பயணத்தைக் கொண்டு நான் உதவிசெய்யப்பட்டுள்ளேன் (பெருமானார் (ஸல்) ஓரிடத்திலிருந்தால் அதிலிருந்து ஒரு மாதம் பயணம் செய்யும் தூரம் பாதுகாப்பு வலயமாக அவர்களுக்கு ஆக்கப்பட்டுள்ளது. 

4. கொள்ளைப் பொருள்கள் அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. 

5. ‘ஷபாஅத்’ பாவிகளுக்காக ‘ஷபாஅத்’ சிபார்சு செய்யும்நிலை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை எனது உம்மத்தினருக்காக நான் வைத்துள்ளேன். என்று! 

மேற்குறித்த ஐந்து பரிசில்களும் உலகில் தோன்றிய எவருக்கும் வழங்கப்படாதவையாகும். இதன்மூலம் மாநபீயின் மேன்மைநிலை அவர்களாலேயே உலக மக்களுக்கு எடுத்தோதப்பட்டுள்ளது. 

தர்க்கம் 
அமீறுல் முஃமீனின் ஹழ்றத் உமர் (றழி) அவர்களுக்கு ஒரு யஹூதியிடம் ஒரு தேவையிருந்தது 

அவனைக் கண்டபோது எல்லா மனிதரையும்விட முஹம்மது (ஸல்) அவர்களைச் தேர்ந்துக் கொண்ட இறைவன் மீது ஆணையாக நான் உன்னைத் தேடிக்கொண்டேயிருந்தேன். உன்னிடம் எனக்கு ஒரு தேவையுள்ளது என்றார்கள். 

அதைக் கேட்ட யஹூதி மற்ற மனிதரைவிட முஹம்மதை இறைவன் தேர்ந்து கொள்ளவில்லை என்றான். 

உமர் (றழி) அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது உடன் யஹூதியின் கன்னத்தில் அறைந்துவிட்டார்கள். உடன் யஹூதி நபீகளிடம் வந்து ‘முஹம்மதே எல்லா மனிதரைவிடவும் உங்களையே இறைவன் தேர்ந்து கொண்டான் என்று உமர் சொன்னார். அதை மறுத்தேன் எனது கன்னத்தில் அடித்துவிட்டார்’ என்றான். 

உமறுக்காக அவனிடம் பரிந்த நபீயவர்கள் அவனைப்பார்த்து “யஹூதியே ஆதம் சபியுல்லாஹ், இப்றாஹீம் கலீலுல்லாஹ், மூஸா நபிய்யுல்லாஹ், ஈஸா றுஹுல்லாஹ், நான் ஹபிபுல்லாஹ் என்று சொன்னதோடு இறைவனுக்கு ஒரு பெயர்கள் உள்ளன. ஒன்று ‘அஸ்ஸலாம’ அதைக்கொண்டு எனது உம்மத்தவருக்கு ‘அல் முஸ்லிம்’ என்று பெயர் வைத்துள்ளான் 

அவனது இரண்டாவது பெயர் ‘அல் முஃமின்’ அதை எனது சமூகத்தவருக்கு ‘அல் முஃமினின்’ என்று பெயர் சூட்டியுள்ளான். 

யஹூதியே, நீங்கள் முந்தியவர்கள் நாங்கள் பிந்தியவர்கள். ஆனால் மறுமையில் நாங்களே முந்தியவர்கள். 

யஹூதியே, சொர்க்கத்தில் நான் நுழையும்வரை ஏனைய நபீமார்களுக்கு அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் எனது உம்மத்தவர்கள் சொர்க்கத்தில் நுழையும் வரைக்கும் ஏனைய சமூகத்தவர் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. 

சொர்க்கத்தில் நானே முதலில் நுழைவேன். அதன்பின் நபீமார்கள் நுழைவார்கள், உலமாக்களில் எனது ‘உம்மத்’ சமூகமே முதலில் நுழையும். அதன் பின்னரே ஏனையோர் நுழைவர். 

முஹம்மது நபீயின் உம்மத்தின் சிறப்புகள் 

ஹழ்றத் கஃபுல் அஹ்பார் (றழீ)சொல்கிறார்கள், 
இறைவன் தனது நபீமார்களை கண்ணியம் செய்ததுபோல் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத் சமூகத்தினரை மூன்று விடயங்களைக் கொண்டு சங்கைப்படுத்தியுள்ளான். 

1. ஒவ்வொறு நபீயையும் அவரவர் கூட்டத்தவருக்கு சாட்சியாக அனுப்பிவைத்தான். ஆனால் எங்கள் நபீயின் உம்மத்தை எல்லா மக்களுக்கும் சாட்சியாக ஆக்கினான். 

2. றஸூல்மார்களே, நீங்கள் மாணமான/நல்ல/ ஹலாலான உணவுகளையே உண்ணுங்கள். நல்ல (அமல்கள்) வேலைகளையே செய்யுங்கள் என்று றஸூல்மார்களுக்குச் சொன்னான். ஆனால் எங்கள் ‘உம்மத்’ சமூகத்தவருக்கு நீங்கள் கேளுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என்று சொல்கின்றான். 

எமது சமூகத்தின் மாண்புகள் 
நபீ முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூத்தவரை ஐந்து விடயங்கள் கொண்டு சங்கைப்படுத்தியுள்ளான். 

1.‘ளூஅபாஉ’ பலயீனர்களாகப் படைத்தான் அவர்களுக்குப் பெருமையேற்படாதிருக்க! 

2. சிறியவர்களாகப் படைத்தான். அவர்களின் உணவு, குடிப்பு, உடையுடைய செலவுகளைக் குறைப்பதற்காக 

3. அவர்களது பாவங்கள் குறைவதற்காக அவர்களின் வாழ்நாளைக் குறைத்தான் 

4. அவர்களது கேள்வி கணக்கு மறுமையில் குறைவதற்காக அவர்களை ஏழைகளாகப் படைத்தான் 

5. அவர்களை இறுதி ‘உம்மத்’ சமூகமாகப் படைத்தான். ‘கப்ர்’ மண்ணறையில் அவர்கள் சொற்ப கால் இருப்பதற்காக என்று! 

நபீ ஆதம் அலை அவர்களின் அருள்மொழிகள் 

நபீ ஆதம் (அலை) சொல்கிறார்கள், 
அல்லாஹ்தஆலா முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு நான்கு அற்புதங்களை வழங்கியுள்ளான். அவற்றை அவன் எனக்குத் தரவில்லை 

1. எனது ‘தவ்பஹ்’ பாவமன்னிப்பு மக்கஹ்விலேயே கிடைத்து. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் எல்லா இடங்களிலும் இருந்து ‘தவ்பஹ்’ செய்கின்றனர். அவர்களது பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக்கொள்கின்றான். 

2. நான் உடையணித்தவனாகவே இருந்தேன். நான் மாறுசெய்தபோது இறைவன் என்னை ‘உர்யான்’ ஆக மாற்றினான். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தவர் உடையில்லாமல் இருந்து பாவம் செய்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் உடையணிவிக்கிறான் (நபீமார்கள் பாவம் செய்ய மாட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் முடிவு இங்கே ஆதம் செய்த பாவத்திற்கு விளக்கம் இருக்கிறது. இவ்விடம் இடம் தராது) 

3. நான் பாவம் செய்தபோது என்னையும் எனது மனைவியையும் பிரித்துவைக்கப்பட்டது. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூகத்தினர் மாறு செய்கிறார்கள் அவர்களையும் அவர்களது மனைவியரையும் இறைவன் பிரித்துவைப்பதில்லை 

4. நான் சொர்க்கத்தில் வைத்துக் குற்றம் செய்தேன் அதிலிருந்து என்னை இறைவன் வெளியேற்றினான். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தவர் சொர்கத்திற்கு வெளியிலிருந்து மாறு செய்கின்றனர். அவர்களை இறைவன் தவ்பஹ்வைக் கொணடு சொர்க்கத்தில் நுழைக்கிறான். 

நூஹ் நபியும் நமது உத்த்த்தினரும். 
இறைவன் நூஹ் நபீ (அலை) அவர்களிடம் ‘நீங்கள் உலகில் எனது ரிஸாலத் மார்க்கத்தை உங்கள் கூட்டத்தாருக்கு எத்தி வைத்தீர்களா? என்று கேட்பான் . அதற்கு நூஹ் நபீ ஆம் என்று சொல்வார்கள். 

பின் நூஹ் நபீயின் கூட்டத்தவரிடம் உங்கள் நபீ நூஹ் (அலை) அவர்கள் உங்களுக்கு ‘ரிஸாலத்’ என்ற தூதை எத்திவைத்ததாக சொல்கிறார்கள் அதை நீங்கள் ஏன் ஏற்கவில்லை என்று கேட்பான். அதற்கவர்கள் ‘ இறைவா! எங்களுக்கு அவர் உனது ரஸாலத்தை எத்திவைக்கவில்லை என்பார்கள். 

இறைவனாகிய உன்மீது ஆணையாக நீ எங்களிடையே உன்மீது ஒரு தூதரை அனுப்பியிருப்பின் நான்கள் அதைப்பின்பற்றி விசுவாசிகளாகியிருப்போம். நீ எமக்கு ஏவியதை நூஹ் நபீ எத்திவைக்கவில்லை என்பார்கள். அப்போது நூஹ் நபீயிடம் நீங்கள் உங்கள் கூட்டத்தவருக்கு மார்க்கத்தை எத்திவைக்கவில்லை என்று சொல்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு எத்திவைத்ததற்கு சாட்சிகள் உண்டா? என்று இறைவன் கேட்பான். 

அதற்கு நூஹ் நபீயவர்கள் ஆம் என்று கூறி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மதினரே சாட்சிகள் என்று சொல்வார்கள். 

உடன் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்ம்தவர்களை இறைவன் அழைத்து நூஹ் நபீ தனது ஏவலை அவரது கூட்டத்தினருக்கு எத்திவைத்ததற்கு நீங்கள்தான் சாட்சி என்று சொல்கிறார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீரா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் ஆம் நூஹ் நபீ தமது சமூகத்துக்கு உனது கட்டளையை எத்திவைத்தார் என்பார்கள். 

அதைக்கேட்ட நூஹ் நபீயின் கூட்டத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினரிடம் நீங்கள் எப்படி சாட்சி சொல்வீர்கள். நாங்கள் உங்களுக்கு முன்தோன்றிய சமூதாயம் நீங்கள் பிந்திய சமூகம் நீங்கள் எப்படி சாட்சியாளர்களாக முடியும் என்பார்கள். 

அதற்கவர்கள் எங்கள் இறைவன் எங்களுக்கு ஒரு றஸூலை அனுப்பினான். அவருக்கு அல்குர்ஆன் என்ற வேதத்தை இறக்கினான். அதில் உங்கள் நபீ நூஹ் உங்களுக்கு இறைவன் ஏவலை எத்திவைத்தார் என்ற செய்தி எழுதப்பட்டுள்ளது. என்று நவின்று நூஹ் நபீயின் கூட்டத்தை வாயடைக்கச் செய்வார்கள். 

எனவே இதிலிருந்து முஹம்மது நபீ (ஸல்) அவர்களே உலகில் தோன்றியோரில் குறிப்பாக றஸூல், நபீமார்களில் உயர்ந்தவர்கள் என்பதும், அதேபோல் அவர்களது சமூகமே உலக மக்களில் உயர்ந்தவர்கள் என்பதும் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் புலனாகின்றது 

எமக்கு வழங்கப்பட்ட உயர்வும் சிறப்பும் எமது கண்மணி நபீ முஹம்மது (ஸல்) அவர்களாலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து எமது உயிர், உடல், உறவினர், பொருள் அனைத்தையும் அவர்களின் ‘மஹப்பத்’ உயர் நேசத்திற்காக தியாகம் செய்வோம். அவர்களின் அவதாரத்தை உளமகிழ்வுடன் கொண்டாடி மவ்லித் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி அன்னதானம் செய்வோம்.
 
                                                                               (முற்றும்)           

          நபிமார்களும், அவ்லியாக்களும் மரணிப்பதில்லை! திருமறை முழக்கம் திருநபி விளக்கம்.

     சம்சுல் உலமா அல்ஹாஜ். அப்துர் றஊப் (மிஸ்பாஹி) அவர்கள் 1983ம் ஆண்டு வெளியான ஞானச்சுரங்கத்திற்கு எழுதிய கட்டுரை.


'பீஸபீலில்லாஹ்’ அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு உயிர் இழந்தவர்கள் மரணித்துவிட்டார்கள் என்று கருதிவிடாதீர்கள் எங்கிலும் அவர்கள் தங்களின் இறைவனிடம் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளை கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள்” (அல்குர்ஆன்)

மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தின் மூலம் புனிதப்போரில் உயிர் துறந்த உத்தமர்கள் ஷுஹதாக்கல் ஆவார்கள் அவர்களுக்கு இவ்வுலகில் மவ்த் மரணம் பேரளவில் மட்டும்தான் ஏற்படுகிறது ஆயினும் அவர்கள் உண்மையில் மரணிப்பதில்லை. 
அவர்கள் எங்கு இருந்தாலும் உயிரோடுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் பல்வேறு அருட்களும் அவர்களுக்கு கிடைக்கின்றன. அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாய் இருக்கிறார்கள் என்ற உண்மையான தத்துவங்கள் கிடைக்கின்றன.

மேலே கூறிய மறை வசனம் ஷுஹதாக்கல் எனப்படும் புனிதப்போரில் உயிர் துறந்தவர்களைப் பற்றி அருளப்பட்ட வசனமேயாகும். அந்தத் தியாகிகள் யாவரும் யுத்த களத்தில் மரணத்தைத்தழுவி முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டவர்களேயாவார்கள். 

அவர்கள் மரணித்ததும் அவர்களை மற்ற நண்பர்கள் நல்லடக்கம் செய்ததும் உண்மையேயாகும். இறைவன் திருமறையில் மேலே கூறிய வசனத்தின் மூலம் ஷுஹதாக்கள் மரணிக்கவில்லை என்று தெளிவாகக்கூறியுள்ளான் இதனால் ஷுஹதாக்கள் உயிர்தியாகிகள் யாவரும் பேரளவில் மரணத்தவர்களேயன்றி 'ஹகீகத்’ யதார்தத்தில் அவர்கள் மரணிக்கவில்லையென்பது தெளிவாகிவிட்டது. 

மறை வசனத்தில் கூறப்பட்ட ஷுஹத்தாக்கள் உயிர்தியாகிகள் யாரெனில் திருக் கலிமாவை நிலைநாட்டுவதற்காகவும் ஈமானையும், ஸ்திரப்டுத்துவதற்காகவும் காபிர்களுடன் போர்தொடுத்து அந்தப்போரில் காபீரீன்களால் அல்லது தவறுதலாக முஸ்லீம்களால் வெட்டப்பட்டு இறந்தவர்களேயாகும். மேலே கூறப்பட்ட வசனங்கள் யாவும் இவர்கள் விசயத்தில் அருளப்பட்டவைதான்.

கலிமாவுக்காகவும், தவ்ஹீதை நிலைநாட்டுவதற்காகவு மின்றி நாட்டைக்கைப் பற்றுவதற்கும், எல்லைப் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்கும் மேலும் இவ்வுலக விவகாரங்களுக்கும் நடைபெறும் போர் புனிதப்போராக மாட்டாது. 

அதில் இறப்பவர்கள் ஷுஹதாக்கள் ஆகவும் மாட்டார்கள். அவர்களுக்கு மேலேகூறிய வசனத்தில் உள்ள எந்த ஒரு சிறப்பும் கிடையாது. ஆகவே ஷுஹதாக்கல் எனப்படுவோர் புனிதப்போரில் உயிர்துறந்தவர்களேயல்லாமல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் உயிர் துறந்தவர்களல்லர்.

மேலே கூறிய மறை வசனத்தில் விரிவான விளக்கத்தை அறியாதவர்கள் அவ்வசனத்தில் சுஹதாக்களை மட்டும்தான் அல்லாஹ் கூறியுள்ளான் ஆகையால் ஷுஹதாக்கள்அல்லாத வேறெவரும் ஷஹீதுடைய இடத்தை அடைய முடியாது என்று கருதி. 

நபிமார்களும், அவ்லியாக்கலும் ஷுஹதாக்களின் பதவியை பெற முடியாது என்றும் ஷுஹதாக்கள் அல்லாத எவரும் மரணித்த பின்பு உயிரோடு இருப்பதில்லை என்றும் வாதிடுகிறார்கள். இன்னொர் திருமறை வசனத்தின் சரியான விளக்கத்தை அறியாதவர்கள் என்றே கூறவேண்டும் மேலே கூறப்பட்ட மறை வசனத்தை சரியாக ஆராய்ந்தால் அவ்வசனத்திலேயே நபிமார்களும் அவ்லியாக்களும் மரணத்தபின் உயிர் உள்ளவர்கள் என்பது தெளிவாகும்.

ஷுஹதாக்கள் அல்லாத நபிமார்களும் அவ்லியாக்களும் இயற்கை மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு மேற்கூறிய வசனத்தில் எந்த வகையில் ஆதாரம் இருக்கிறது என்பதை பின்னால் ஆராய்வோம். நபிமார்கள் அவ்லியாக்கல் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் ஆராய்வோம்.

1.நபிமார் தமது கப்ரில் மண்ணறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –பைஹகீ

2. நான் விண்ணுலக யாத்திரை சென்றபோது நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருகே சென்றேன் அப்பொழுது அவர்கள் தங்களின் கப்ரில் மண்ணறையில் நின்றவர்களாய் தொழுதுகொண்டிருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம் –புஹாரி

3. நபி (ஸல்)அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற இரவு எல்லா நபிமார்களையும் அல்லாஹ் நமது நபிக்கு எழுப்பிக் காட்டினான் நபி (ஸல்) அவர்கள் அந்த நபிமார்களை மஉமூம் தொடர்பவர்களாய் வைத்து இரண்டு ரக்அத் தொழுகை நடாத்தினார்கள். ஆதாரம்- புஹாரி, முஸ்லீம்

4. நான் விண்ணுலக யாத்திரை செய்த பொழுது நபிமார்களில் ஒரு கூட்டத்துடன் என்னை நான் கண்டேன் அப்போழுது மூஸா நபி (அலை) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள் மூஸா நபி சுருண்ட முடியுடையவராயும் மஞ்சல் நிறத்தை ஒத்தவராயும் இருந்ததைக் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள். ஆதாரம்-புகாரி, முஸ்லீம்

மேற்கூறப்பட்ட ஆதாரபூர்வமான நான்கு ஹதீஸ்களின் மூலம் நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது ஆயினும் உங்களுக்கு ஒரு சநதேகம் தோன்றும் அதை விளக்கி வைக்கிறேன்.

இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்ட மூஸா (நபி) தனது கப்ரில் தொழுதுகொண்டிருந்த விஷயமும் மூன்றாவது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமாரையும் வைத்து தொழுகை நாடாத்தினார்கள் என்ற விஷயமும்.

 நான்காவது ஹதீஸில் மூஸா நபி சுருண்ட முடியையும் மஞ்சல் நிறத்தையும் உடையவர் என்ற விசயமும் நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகாதென்று சிலர் கருதி நபிமார்கள் மற்ற உயிரினங்களைப்போல் உயிரில்லாத பிணங்கள் என்றும் கூறுகிறார்கள் அதற்கு பின்வருமாறு அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை சென்ற சமயம் மூஸா நபி (அலை) அவர்களின் உடலமைப்பில் சடமில்லாத உருவத்தையும், மஉமூம்களாக நின்று தொழுத ஏனைய எல்லா நபிமார்களின் உடலமைப்பில் சடமில்லாத பல உருவங்களையும் இறைவன் நபி (ஸல்) அவர்களின் பார்வைக்கு காட்டிக் கொடுத்தானேயன்றி அந்த நபிமார் சடமுள்ளவர்களாகத் தென்படவில்லை.

 எனவே மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறுகிறார்கள் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் அல்லர். 

வென்பதற்கு மேலேகூறிய மூன்று ஹதீஸ்களிலும் ஆதாரமில்லை என்று வாதிடுவோர் முதலாவதாக கூறப்பட்ட பைஹகீ அறிவித்த ‘நபிமார் தமது கப்ரில் உயிரோடு இருக்கிறார்கள் இன்னும் தொழுகிறார்கள் என்ற ஹதீஸ் பற்றி என்ன சொல்வார்கள்? 

அந்த ஹதீஸில் நபிமார் மரணித்தபின் உயிருள்ளவர்கள் என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதால் அவர்கள் உயிரோடு இருப்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அந்த ஹதீஸ் ஆதாரமற்ற தென்று கூறுவதற்கும் வழியே இல்லை.

மேலே கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களிலும் நபிமார் மரணதித்தபின் உயிருள்ளவர்கள் என்பதற்கான ஆதாரத்தை கவனிப்போம். 

மூஸா நபி (அலை) அவர்களும் மற்ற எல்லா நபிமாரும் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்களுக்கு காட்சி கொடுத்தார்கள் என்பதற்கு நபிமார்களின் உடலமைப்பை பெற்ற உருவங்களை கண்டார்களேயன்றி அவர்களை சடத்துடன் காணவில்லை என்று மேற்கூறப்பட்ட மூன்று ஹதீஸ்களுக்கும் மறுப்பவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.
நபீ (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமாரை அவர்களின் சடத்துடன் காணவில்லை என்பது அவர்களின் வாதமாகும். இவர்களின் வாதம் மறுக்கப்படவேண்டியதேயாகும். 

ஏனெனில் நபி மூஸா (அலை) அவர்களும் மற்ற நபிமார்களும் தொழுவார்கள். என்ற நபி மொழியிலிருந்து அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஏனெனில் தொழுகை என்பது ருகூஉ, சுஜூது போன்ற பலவகையான செயல்களைக் கொண்டதாகும் செயல்கள் ஆட்ட அசைவுகள் யாவும் சடத்துக்குரிய தன்மைகளேயன்றி றூஹூக்குரியவையல்ல. 

குனிதல், நிமிர்தல், நிற்றல் ஆகியவையெல்லாம் சடத்துக்கும் உடலுக்குமுறிய தன்மைகளாகும் தொழுகையில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதால் விண்ணுலக யாத்திரையின்போது நபி (ஸல்) அவர்கள் கண்ட நபிமார் யாவரும் தமது சடத்துடனேயே காட்சியளித்தார்கள். என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. 

மேலும் நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் உடையவர்கள் என்று வருணித்ததிலிருந்தும் நபி மூஸா (அலை) அவர்கள் தமது சடத்தோடுதான் காட்சியளித்தாகள் என்பது விளங்குகிறது. 

ஏனைனில் சுருண்ட முடியும் மஞ்சல் நிறமும் சடத்துக்குரிய வருணனையேயன்றி றூஹூக்குரியதல்ல. றூஹூ உயிர் என்பது சுருண்டது, நீண்டது, கறுப்பு, மஞ்சல் என்று வருணிக்கமுடியாததாகும். 

எனவே நபிமார் மரணத்தின்பின் உயிரோடு இருக்கிறார்கள் என்பது நபி (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரையின்போது நபிமார்களை அவர்களின் சடத்துடனேயே கண்டார்கள் என்பதும் மேற் கூறப்பட்ட ஹதீஸ்கள் மூலம் நிரூபணமாகிவிட்டது.

நபிமார் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களும், அவ்லியாக்களும் அறிஞர்களும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் தெரிவிக்கவில்லை. 

ஆனால் வஹாபிய்யத் எனும் வழிதவறிய கொள்ளை வழிநடப்பவர்களும் இன்னும் அவர்களைப்போன்ற சுன்னத் வல் ஜமாஆத் கொள்கைக்கு முரண்பட்ட கொள்கையுடையவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருப்பதில்லை அவர்களின் சரீரம் இறந்து அழிந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டது என்று கருதுகிறார்கள்.

இமாம்களும் அவ்லியாக்களும் ஏகமாக நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் தமது சடத்துடன் உயிரோடு இருக்கிறார்கள் என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. விபரம் பின்னால் வரும்.

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (ரஹ்) அவர்களும் நபிமார் மரணித்தபின் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆயினும் மரணத்தின்பின்பு நபிமார் தமது சடத்துடன் காட்சியளிப்பதை மறுக்கிறார்கள்.

நபிமாருடைய மரணத்தின் பின்பு யாராவது அவர்களை கனவில் அல்லது விழிப்பில் கண்டால் அவர்களின் உடலமைப்பையுடைய உருவத்தைக் காண்கிறார்களேயல்லாமல் அவர்களின் சடலத்தைக் காணவில்லை. என்று வலியுறுத்திக்கூறியுள்ளார்கள்.

இமாம்களுக்கிடையில் கருத்துவேறுபாடு இல்லையானால் நான்கு மத்ஹபுகள் தோன்றியிருக்க மாட்டாது “இக்திலாபுல் அயிம்மா றஹ்மதுன் லில்உம்மா” இமாம்களின் கருத்து வேறுபாடு மனிதர்களுக்கு மாபெரும் அருளேயாகும். என்று அறிஞர்கள் ஏகமாக கூறியுள்ளார்கள்.

இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும் இமாம் கர்றாபி (றஹ்) அவர்களும் நபிமார் மரணத்தின்பின்பு சடத்துடனேயே மற்றவர்களின் கனவிலோ, நினைவிலோ காட்சியளிக்கின்றார்கள் என்பதை மறுக்கின்றார்கள். 

ஆயினும் நபிமார் மரணத்தின் பின்பு உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரையும் தவிரவுள்ள ஏனைய இமாம்கள் இவ்விருவருக்கும் மாறாக கூறுகிறார்கள். 

நபீமார் மரணத்தின்பின்பு உயிரோடு இருப்பதைப்போல் தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். 

இதுவரை எழுதியவற்றிலிருந்து நபிமார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதும் கனவிலோ நினைவிலோ தமது சடத்துடனேயே மற்றவர்களுக்கு காட்சியளிக்கின்றார்கள் என்பதும் நிரூபணமாகிவிட்டது.

ஆரம்பத்தில் கூறிய திருமறை வசனத்தை ஆராய்வோம். அவ்வசனத்தில் மரணத்தின் பின்னும் உயிரோடு இருப்பவர்கள் ஷுஹதாக்கள் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் என்று அல்லாஹ் அருளியுள்ளான். அந்த ஷுஹதாக்களில் நபிமார்களும் அவ்லியாக்களும் சேர்ந்தவர்களா? இல்லையா? என்பதை ஆராய்வோம்.

மேலே கூறப்பட்ட திருமறை வசனத்தில் “குதிலூ பீஸபீலில்லாஹ்” அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு இறந்தவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான் இதனால் புனிதப்போரில் உயிர் துறந்தவர்கள் மட்டும்தான் அவ்வசனத்தில் குறிக்கப்பட்டவர்கள் என்பது மேலெழுந்த வெளிப்படையான விளக்கத்தின்மூலம் கிடைக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் புனிதப்போருக்கு சென்று யுத்தம் செய்துவிட்டு திரும்பி வந்த சமயம் நாம் சிறிய யுத்தத்திலிருந்து பெரிய யுத்தத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்கள். 

அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் ரசூலே நாம் செய்துவிட்டு வந்திருப்பது சிறிய யுத்தம் என்றால் பெரிய யுத்தம் எது என்று வினவினார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தனது நப்சுடன் போராடுவது பெரிய யுத்தம் என்று அருளினார்கள். 

இந்த ஹதீஸில் போர்களத்தில் வால் ஏந்தி காபீர்களுடன் யுத்தம் செய்வது சிறிய யுத்தம் என்றும் ஒருவர் தனது நப்சுடன் போரிடுவது பெரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிறிய யுத்தத்தில் உயிர் துறந்தவர் ஷஹீத் ஆகிவிடுகிறார் என்றால் பெரிய யுத்தம் என்று நபி (ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட நப்சுடனான போரில் உயிர் துறந்த ஒருவர் ஷஹீதாகி விடுவார் என்பதில் வியப்பொன்றும் இல்லை.

‘நுபுவ்வத்’ நபித்துவம் என்ற பதவி நபிமாருக்கும், ‘விலாயத்’ ஒலித்தனம் என்ற பதவி அவ்லியாக்களுக்கும் கிடைப்பதனால் அப்பதவியைப் பெறுபவர் நப்ஸுடன் போராடி வெற்றி பெற்றவராக இருத்தல் வேண்டும் 

உயர் பதவிக்கு தகுதியற்றவருக்கு அப்பதவியை வழங்குவது நியாயமற்றது ஹக்தாஆலா நியாயமில்லாத வேலை செய்ய மாட்டான் உலகில் தோன்றிய எல்லா நபிமார்களும் ஒலிமார்களும் ஜிஹாத் அக்பர் என்னும் பெரிய யுத்தம் செய்தவர்களேதான். 

அவ்யுத்தத்தில் போராடி வெற்றி பெறாதவர் நபியாகவோ ஒலியாகவோ முடியாது. எனவே மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நப்சுடன் போராடிய அனைவரும் பெரிய யுத்தம் செய்த ஷஹீதுகளேயாவார்கள். 

சிறியபோரில் உயிர் துறந்தவர் மரணித்த பின்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் நப்ஸுடன் போராடிப் பெரிய யுத்தம் செய்தவர் உயிருடன் இருப்பது நிச்சயமானதாகும்.

வாளேந்தி காபீர்களுடன் சமர் செய்வது சிறிய ஜிஹாத் யுத்தம் என்றும் நப்சுடன் போராடுவது பெயரிய யுத்தம் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதன் இரகசியம் என்னவெனில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாத காபிரீன்களுடன் வாலேந்திப் போரிடுவது மிகச் சுலபம். 

ஏனெனில் காபீர் தன்னை விட்டும் வேறானவனேயல்லாமல் தன்னிலிருப்பவன் அல்லன். நப்ஸு என்பது தன்னிலேயே அமைந்த ஒன்றாகும். மேலும் காபிர் சடமுள்ளவனாகும் நப்ஸ் என்பது சடமுள்ளதல்ல ஆகையால் தன்னை விட்டும் வேறான ஒருவனையும், சடமுள்ளவனையும் வெட்டிக் கொன்றுவிடுதல் தன்னிலுள்ளதையும், சடமில்லாததையும் வெட்டிக் கொல்வதைவிடச் சுலபமானதேயாகும். 

கூண்டில் கிளியிருப்பது போல் மனிதனிலேயே தங்கியுள்ள நப்ஸு எந்த நேரத்தில் எந்த உருவத்தில் தீமை செய்யும் என்பதை அறிந்து கொள்ள முடியாது மேலும் காபீரை வாள்போன்ற ஆயுதத்தினால் வெட்டி விடலாம். ஆனால் நப்ஸ் என்பது வாள் போன்ற ஆயுதத்தினால் வெட்ட முடியாத ஒன்றாகும். ஒரு காபிரை வெட்டி வீழ்த்துவதிலும். நப்ஸை வெட்டி வீழ்த்துவதிலும் நப்சை வெட்டிவீழ்துவதுதான் மிகவும் சிரமமானது.

மேலும் நபி (ஸல்) அவர்கள் இன்னோரு ஹதீஸில் உனது பகைவர்களில் உனக்கு மிகவும் கொடிய பகைவன் யாரெனில் உனது இரண்டு விலாவுக்கும் இடையிலுள்ள நப்சு ஆகும் என்று கூறியுள்ளார்கள்.

இந்த ஹதீஸில் திருக்கலிமாவை ஏற்றுக் கொள்ளாதவன் பகைவனாய் இருந்தாலும் நப்சானது அவனைவிட பகை கூடியதென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவே பகை கூடியவனை வெற்றி கொள்வது பகை குறைந்தவனை வெற்றி கொள்வதைவிட சிறந்ததென்பது தெளிவாகிவிட்டது. 

ஆகவே பகை குறைந்த காபிரை வெற்றி கொண்டவன் ஷஹீது என்ற பதவியை பெற்று மரணத்தின் பின்னும் உயிரோடு இருக்கும் பட்சத்தில் பகை கூடிய நப்ஸுடன் போராடி பெரிய ஜிஹாத் செய்து அதை வெற்றி கொண்டவன் ஷஹீது எனற பதவியைப் பெற்று மரணித்தபின் உயிரோடு இருப்பது வியப்பொன்றுமில்லை.

போர்களத்தில் வாளேந்தி போரிடுவது சிறிய யுத்தம் என்பதும் நப்ஸுடன் போராடுவது பெரிய யுத்தம் என்பதும் மேலேகூறிய ஹதீஸ்களினால் நீரூபனமாகிவிட்டதால் சிறிய யுத்தம் செய்தவர் மரணத்தின்பின் உயிரோடு இருப்பதேபோல் பெரிய யுத்தம் செய்தவரும் உயிரோடு இருக்கிறார் என்பதும் தெளிவாகிவிட்டது.

(முற்றும்)

              நபீகள் திலகர் முஹம்மது (ஸல்) நாடிய அறிவு எது?

  புகஹாக்கள் எனப்படும் ஷரீஅத் சட்ட நிபுணர்கள் ‘அல்இல்மு’என்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முஷ்ஷரீஅத் எனப்படும் மார்க்கச்சட்ட அறிவு என்றுசொல்கின்றனர். 



அதேபோல்முஹக்கிகீன் எனப்படும் இறைகொள்கை வல்லுனர்கள் அல்இல்மு என்றசொல்லில் நபிகள் நாடிய அறிவு இல்முத்தௌஹீத், இல்முல்மஃரிபஹ் எனப்படும் இறையறிவு என்று சொல்கின்றனர் இதன்படி ஒரு முஸ்லீம் கலிமத்துத் தௌஹீத் இறை கொள்கை பற்றிய அறிவையும் ஷரீஅத் போந்தும் தொழுகை,ஸகாத், நோன்பு, ஹஜ் ஆகிய கடமைகள் பற்றிய அறிவு ஞானங்களையும் கற்றிருக்க வேண்டும். 

இவ்வறிவு எவரிடமில்லையோ அவர் இறைவனைப் பற்றி அறியாதவராகவும் ஏனைய கடமைகளை சரிவரச் செய்ய முடியாதவராகவும் ஆகி விடுகின்றார்.
காரணம் அமல்கள் எனப்படும் வணக்கங்களைச் செய்வதற்கு முதல் அவ்வமல்களைச் செய்வது பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும் அறிவு இருந்தால்தான் அமல் நிறைவேறும். இன்றேல் அமலால் பயனடைய முடியாது. அமல்களும் நிறைவேறாது. 


எனவே ஒரு முஸ்லீம் கொள்கை பற்றிய அறிவையும் இஸ்லாத்தின் கடமைகள் பற்றிய அறிவையும் கற்றிருப்பது கடமையாகின்றது. 


ஈமானுடைய பர்ளுகள், ஆறாக இருப்பினும் இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாக இருப்பினும் இவ்விரண்டிலும் முதற்கடமை அல்லாஹ் பற்றி அறிந்திருப்பதும் முதற்கடமையாகின்றது. 


ஈமானையும் இஸ்லாத்தையும் இணைத்தே ஷரீஅத் ஆகும். 


இவ்விரண்டில் ஒன்றையெடுத்து மற்றதை விடுவது எவ்வகையிலும் ஷரீஅத் ஆகாது. தீனுல் இஸ்லாம் என்பது அகீதஹ் (கொள்கை) அஃமால்/ இபாதாத் (செயல்கள்/வணக்கங்கள்) இக்லாஸ் (கலப்பற்ற-இரண்டற்ற நிலை) ஆகிய மூன்றையும் உள்ளடக்கி நிற்கிறது. இவை ஷரீஅத், தரீகத்,ஹகீகத், மஃரிபத் ஆகிய நான்கையும் கொண்டுள்ளது. 


இதனையே அல் குர்ஆன் ‘லிகுல்லின் ஜஅல்னா மின்கும் ஷிர்அதன் வமின்ஹாஜன்’ உங்களில் ஒவ்வொறுவருக்கும் ஷரீஅத்தையும், மின்ஹாஜ் எனும் தரீகத், ஹகீகத், மஃரிபத் ஆகியவற்றையும் ஆக்கியுள்ளோம். என்று சொல்கிறது. எனவே ஒரு முஸ்லீம் இம்மூன்றையும் அறிந்து செயற்படுவது அவசியமாகின்றது. 


காரணம் இம்மூன்று அம்சங்களையும் கொண்ட தீன் சன்மார்க்க அறிவுதான் ஒரு முஸ்லிமின் இவ்வுலக மறுவுல வாழ்வுக்கு மிக அவசியமானது அதனாற்றான் நபிகள் திலகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல் இல்மு எனும் அறிவை தேடுவது ஒவ்வொரு முஸ்லீமுக்கும் கடமை என்று நவின்றார்கள். 


இங்கே நபீகள் அல் இல்மு என்று குறிப்பிட்டது மார்க்க அறிவையேயன்றி வேறு எவ்வறிவையும் அல்ல. எல்லா அறிவுகளையும் என்று நபிகள் நாடியிருந்தால் விஞ்ஞானம், கணிதம், பூமி, வானசாஸ்திரம் போன்ற அறிவுகளையும் எல்லாரும் கற்பது பர்ழாக ஆகிவிடும். இது அசாத்தியம். 


எனவே நபீகள் இம்மொழியில் தலபுல் இல்மி ஒரு அறிவை தேடுதல் என்று குறிப்பிட்டிருப்பதால் அது இல்முத்தீன் எனும் சன்மார்க்க அறிவு என்றும் குறிப்பாக சன்மார்க்கத்தின் அடிப்படையான இல்முத்தௌஹீத் ஏகத்துவ கொள்கை அறிவு என்றும் மார்க்க மேதைகள் சொல்கின்றனர். 


மேற்குறித்த விபரத்தின் படி ஈமான் இஸ்லாத்தின் முதல் அம்சமான இறை கொள்கை பற்றிய அறிவை விரிவாகக் கற்பதும் தொழுகை ஸக்காத், நோன்பு, ஹஜ் கிரியைகளின் அறிவை விரிவாகக் கற்பதும் இறைவணக்கத்தின் உயிரோட்டமான இக்லாஸ் பற்றி விரிவாகக் கற்பதும் மிக அவசியமும் கடமையும் ஆகும். 


சுருங்கக் கூறின் இம்மூன்றையும் ஏற்றுக் கற்றவரே முஸ்லிம் முஃமின் என்றும் இதை மறுத்தவர் காபிர் என்றும் கணிக்கப்படுகின்றார். 


தீனும் தீன்தாரிகளும் 


இன்றைய முஸ்லீம்களில் அனேகர் தீனின் முக்கியத்துவத்தை உணராது தொழுகை போன்ற செயற்பாட்டு அறிவுகளை மட்டும் கற்பதில் அதை மட்டும் போதிப்பதிலும் சிலர் அதைக்கூடக் கற்காது பின்பற்றல் வாதிகளாகவும் காலத்தைக் கழிக்கின்றனர். 


ஈமானின் இஸ்லாத்தின் முதற்கடமையான கொள்கை பற்றிய அறிவையும் இபாதத்தின் உயிர் நாடியான இக்லாஸ் பற்றிய அறிவையும் அவசியம் கற்காமலும் அதை தெரிந்தோர் போதிக்காமலும் அதை கூறுபவரை மார்க்கத்திற்கு முரணானவர் எனக் கருதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். 


ஒரு வருவருக்கு ஏழு வயதிலிருந்த இறை கொள்கையறிவே எழுபதிலும் இருக்கிறது. முதற்கடமையான அல்லாஹ் பற்றி ஐந்து நிமிடம் சொல் என்றால் ஏழுவயது சிறுவனின் இறையறிவே அவரில் காணப்படுகிறதேயன்றி அல்லாஹ் பற்றி அவரால் சொல்ல முடியாது இதனை நபி (ஸல்) அவர்களின் திருச்சபையில் ஒளியினால் படைக்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) மனித உருவில் தோன்றி இம்மூன்றையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டறிந்து சென்றார்கள். அவர்கள் சென்றபின் நபிகள் (ஸல்) அவர்கள்தோழர்களை விழித்து வந்தவர் ஜிப்ரீல் என்றும் அவர் ‘அதாகும் லியு அல்லிமகும் தீனகும்’ உங்களது தீன் சன்மார்க்கத்தை உங்களுக்கு கற்றுத்தர வந்து சென்றார் என்றும் கூறினார்கள். இவ்வரலாறு தீன் எனும் சொல் ஈமான் இஸ்லாம் இக்லாஸ் ஆகிய மூன்றையும் வலியுறுத்துகிறது. 


காகம் அன்று கூடு கட்டியது போன்றே இன்றும் கூடு கட்டுகின்றது. எல்லா விடயங்களிலும் உச்சநிலையை அடைந்து மாளிகையில் வாழும் மனிதன் இன்று கொள்கையறிவில் காகத்தின் தறஜஹ் படித்தரத்தில்தான் வாழ்கிறான். 


ஒரு முஸ்லீமுக்கு கொள்கையறிவு அவனது தலையைப் போன்றது செயற்பாட்டறிவு அவனது கை, கால் போன்றது மனிதன் தலை இன்றேல் உயிர் வாழ முடியாது. எனவே மார்க்கத்தின் தலையான கொள்கையறிவைப் புறக்கணித்து கை,கால்போன்ற கிரியை அறிவை மட்டும் கற்பதில் என்ன பயனுன்டு? தலையில்லாதவனுக்கு எது இருந்தும் என்ன பயன்? கொள்கை தெரிந்த ஒருவன் அமல் செய்யாது போனாலும் அவன் அவனது உறுதியான இறைகொள்கையினால்சொர்க்கம் புகுந்துவிடுவான். ஆனால்கொள்கை என்ன வென்று தெரியாமலும் தெரிந்தவனிடம் சென்று கற்காமலும் அமல் எனும் செயற்பாட்டு வணக்கத்தில் மட்டும் ஈடுபட்டவன் எவ்வாறு விசுவாசியாவான்? எப்படி சுவர்க்கதில் நுழைவான்? 


கொள்கையறிவை உரியவாறு அறிந்து உறுதிபெற்றவன் அமல்களை நிராகரிக்காது அவற்றை செய்ய முடியாது போனால் அதை விட்ட காரணத்தால் ‘ஆஸீ’ பாவியாகிவிடுவானேயன்றி அவன் காபிராகிவிடான். இறைவன் நாடின் அவனது கருணையினால் பாவியின் பாவத்தை மன்னித்து அவனை சொர்க்கத்தில் நுழைத்துவிடுவான். 


ஆனால் கொள்கையை அறியாதவன் சொர்க்கத்தில் நுழைய முடியாது அவன் மறுமையில் இறைசமூகம் சேரமாட்டான். 


மேற்குறித்த விபரங்களில் இருந்து முஸ்லீம் மிக அவசியம் கற்கவேண்டிய அறிவு இல்முத்தீன் எனும் இல்முத் தௌஹீத் ஆகும் இல்முத் தௌஹீத் எனும் ஏகத்துவ அறிவுதான் வஹ்ததுல் வுஜுத் (உள்ளமை ஒன்று) என்றும் இல்முல் ஹிக்மத் (யதார்தத்தை அறியும் மெஞ்ஞான இறை தத்துவ அறிவு) என்றும் அழைக்கப்படுகிறது. பெயரில்தான் வித்தியாசமேயன்றி யதார்த்ததில் அல்ல. 


இவ்வறிவின் மூலம் இரு உள்ளமைகள் இல்லையென்றும் அல்லாஹ் எனப்படும் ஒரேயொரு வுஜுத்\தாத் என்ற உள்ளமைதான் சர்வ பிரபஞ்சமாகவும் பலதாகவும் உள்ளது என்றும் பிரபஞ்சமென்பது அந்த ஒரேயொரு மூலத்தின் கோலமேயன்றி அது தனியான சுயமான உள்மையல்ல என்றும் ஒரு மூலப்பொருளைக் குறிக்கும் இரு சொற்களே வுஜுதும் தாத்தும் என்பதும் அவ்விரண்டும் ஒன்றென்பதும் தெளிவாகிறது. 


கடலின்மேல் நடனமிடும் குமுழி சுயமானதல்ல ஐஸ்கட்டி சுயமானதல்ல நீரே அவற்றின் மூலமாகும். 


நீர்தான் தன்னை கொண்டு நிலை பெற்றுள்ளது. குமுழியும் ஐஸும் தன்னைக் கொண்டு நிலைபெற்றிருக்க வில்லை. அவ்விரண்டையும் நீரைக் கொண்டே நிலை பெற்றுள்ளன. ஐஸ், குமுழி என்பவை பார்வையிலும் புத்தியிலும்தான் உள்ளவை யதார்தத்தில் இல்லாதவை ஐஸ் குமுழி என்று பார்வையும் அறிவும் சென்னாலும் கையில் படும்போது நீரையே உணர்கிறோம். இதேபோல் பிரபஞ்சம் (சிருஷ்டி) என்பது ஆதேயமானதேயன்றி ஆதாரமானதல்ல. ஆதேயம் தன்னைக் கொண்டு சுயமாக தனியாக இருக்காது. ஆதாரத்தைக் கொண்டே அது நிலைபெற்றிருக்கும். 


உதாரணத்திற்கு பன் என்பது ஆதாரமானது. பாய் என்பது ஆதேயமானது. பாய் என்பது தன்னைக் கொண்டு சுயமாக நிற்பது அசாத்தியமாகையால் பன்னைக் கொண்டே நிலைபெற்றிருக்கிறது. பாய் என்பது அறிவிலும் பார்வையிலுமே உள்ளது. அமரும்போது நமது உடல் பன்னில்தான் படுகிறது பாயில் அல்ல காரணம் பாய் என்பதே யதார்த்தத்தில் இல்லை. இதேபோல் பிரபஞ்சம் எனும் சிருஷ்டி அல்லாஹ் எனும் உள்ளமையை கொண்டே நிலை பெற்றுள்ளது. பிரபஞ்சத்தின் கோலத்தில் இருப்பது அல்லாஹ் என்ற மூலப்பொருளேயாகும். 


இதனாற்றான், தன்னைப்பற்றி இறைவன் சொல்கையில் ஏகன் (அஹதுன்) என்று சொல்கின்றான் ஏகமாக-எல்லாமாக இருப்பது தானே! வேறல்ல என்பதை நிறுவுவதுடன் தான் அனைத்துமாக இருப்பதால் தான் பலதல்ல. எல்லாமாக இருக்கும் ஒருவனாகிய என்னை ஒன்று படுத்தி தவ்ஹீத் செய்யுங்கள் என்கிறான். 


இறைவன் உள்ளமையில் ஒருவனேயன்றி எண் கணிப்பின்படி ஒருவனல்லன் இதுதான் இஸ்லாத்தின் கொள்கை. 


இவ்வுண்மையை உணராது இவ்விறை தத்துவத்தை அறியாது இன்று முஸ்லீம்கள் பிறந்து மடிகின்றனர். 


இறை கொள்கை பற்றி தெரியாமலும் இறை கொள்கைதான் எல்லாமவன் எனும் வஹ்ததுல் வுஜுத் கொள்கையை மறுத்தும் எதிர்த்தும் அக் கொள்கையை சொல்வோரை மதம் மாறியவர் என்றும் கருதி தமது அறியாமையால் அமல்களில் மட்டும் காலூன்றி அமல்களின் அடிப்படை அறிவின்றி வாழ்வை முடிக்கின்றனர். இன்னும் அதிகமானோர் இறைவன் ஒருவன் என்பதால் அவன் எண் இலக்கத்திற்கு உட்பட்ட ஒருவன் அவன் எங்கோ ஒருஇடத்தில் இருந்துகொண்டு சிருஷ்டிகளை படைத்துக் கொண்டிருக்கின்றான் என்றும் நம்பியுள்ளனர். 


இதுவும் வழிகெட்ட கொள்கையேயாகும். வழி கெட்ட அனைத்துக் கொள்கையையும் மறுத்தே அல்குர்ஆன் இறை கொள்கை பற்றி பின்வருமாறு அறைகிறது. 


அவனே முதலானோன்! 
அவனே இறுதியானோன், 
அவனே (பிரபஞ்சங்களாக) வெளியானோன், 
அவனே உள்ளானோன், 
அவனே அனைத்தைக் கொண்டே, 
அறியப்பட்டோன். 


எல்லாம் அவனே எனும் ஏகத்துவ ஞானம் இல்முத் தவ்ஹீத் இவ்வசனத்தில் எடுத்தோதப்படுகிறது. 


இல்முத் தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவ அறிவு என்று பொருள் சொல்லப்படுகிறது. 


ஏகத்துவம் என்பது ஏகம் + தத்துவம் ஏகமாகவிருப்பது அஹதுன் ஏகன் என்ற அல்லாஹ்தான் என்பது தெளிவாகிறது. 


தெளஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள் கொண்டாலும் அச்சொல் வஹ்ஹத என்ற சொல்லிருந்து பிறந்துள்ளது வஹ்ஹத, யுவஹ்ஹிது, தௌஹீதன் என்பது அச்சொல் தோன்றிய முறையாகும். 


வஹ்ஹத என்றால் ஒன்று படுத்தினான் என்பது பொருள் தவ்ஹீத் என்றால் ஒன்று படுத்துதல் என்பது பொருள் . 


இறைவன் ஒருவனாக இருக்கையில் அவனை ஒன்றுபடுத்து என்று சொல்ல முடியாது. ஒன்றை ஒன்றுபடுத்தல் அசாத்தியமாகும். ஒரு பேனையை சுட்டி அதை ஒன்றுபடுத்துமாறு அதை ஒன்று என்று சொல்லுமாறும் பணிப்பது முஹால் அசாத்தியமானதாகும். இதனையே தவ்ஹீதுல் வாஹிதி முஹாலுன் ஒன்றை ஒன்று படுத்துதல் அசாத்தியம் என்று இறை கொள்கைச் சட்டம் சொல்கிறது. 


எனவே தவ்ஹீத் ஒன்று படுத்துதல் என்பது ஒரேயொரு வுஜுத் உள்ளமை தான் இருந்து பிரபஞ்ச உடையில் பலதாக தோற்றுகிறது. யதார்த்தத்தில் அனைத்தும் ஒன்றே அன்றி பலதல்ல. அலை,நுரை, குமுழி, துளி ஒவ்வொன்றும் சுயமானது போல் தெரிந்தாலும் நீரேயன்றி எதுவுமில்லை என்பதுபோல் அவையனைத்தும் நீர்தான் என்று ஒன்று படுத்துவதுபோல் எல்லாமாக இருப்பது அல்லாஹ் எனும் உள்ளமையே அன்றி இன்னொன்றல்ல. அதுதானே தான் என்று ஒன்று படுத்துவதே தவ்ஹீத் ஆகும். இவ்வறிவே இல்முத்தவ்ஹீத் ஏகத்துவ அறிவாகும் இதனையே இல்முல் ஹிக்மத் என்றும் அழைக்கப்படுகின்றது. 


இல்முல் ஹிக்மத் என்பதற்கு இல்முன் யுப்ஹது பீஹி அன் ஹகீகதி குல்லி ஷையின் ஒவ்வொரு வஸ்துவின் யாதார்த்தம் பற்றியும் ஆராய்ந்து அனைத்திற்கும் அல்லாஹ்வின் வுஜுதே யதார்த்தமான மூலம் என்று அதன் வரைவிலக்கணம் சொல்கிறது. உடையின் மூலம் நூல் என்றும் அதன் மூலம் பஞ்சுதான் என்றும் பஞ்சுக்கு வேறான உடையில்லை என்றும் நூலையும் சீலையையும் பஞ்சுதான் என்று தெரிந்து ஒன்று படுத்துவதுபோல் பிரபஞ்சத்தின் கோலம் பலதாக தெரிந்தாலும் அக்கோலங்களாக யதார்த்தத்தில் உள்ளவன் அல்லாஹ்தான் என்று ஒன்று படுத்தி ஆராயப்படும் அறிவே இல்முல் ஹிக்மத் எனப்படும். எனவே மேற்கண்ட விபரத்தின்படி இல்முத் தவ்ஹீத், இல்முல் ஹிக்மத் கல்வியைக் கற்பதும் அதை கற்பிப்பதும் பர்ழு ஐன் ஒவ்வொருவருக்கும் பிரதான கடமையும் அத்தியாவசியமும் ஆகும். இக் கல்வியினாற்றான் ஈருலகப் பயன் கிடைப்பதுடன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் நிறைவு செய்ய முடியும். 


இவ்வறிவையே நபிகள் (ஸல்) தலபுல் இல்மி ஒரு அறிவைத் தேடு என்றும் அதை தேடுதல் கடமை என்றும் சீனா சென்றேனும் தேடிப்படி என்றும் நவின்று அவ்வறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். 


இவ்வறிவு வழங்கப்பட்டவனே அதிக நன்மை வழங்கப்பட்டவன் என்று அல்குர் ஆனும் சொல்கிறது. 


உண்மை இப்படியிருக்க அவசியம் அறிய வேண்டிய தவ்ஹீதுடைய அறிவை அறியாமல் தீனின் ஒரு பகுதியான இஸ்லாத்தின் கிரியையான அமல்களை மட்டும் தெரிந்தும், சட்டம் தெரியாமலும் செய்துவருவது ஆச்சரியமும் அறியாமையுமாகும்! 


எனவே அல்லாஹ் பற்றி அறியாமலும், அவனே எல்லாம் எனும் தத்துவத்தை ஏற்காமலும் எதிர்ப்போர் இறைவனிடம் தப்பவே முடியாது!!!. 
                                                                      (முற்றும்)

(அல்மிஷ்காத் மாத இதழ் 2002 ஆம் வருட இதழில் அதன் ஆசிரியர் மெளலவி இப்றாஹிம் நத்வியால் எழுதப்பட்டது)

     வலிகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை (றழி) அவர்களின் முத்தான உபதேசங்கள்.

உபதேசம் ஒன்று 

மெய் விஸ்வாசம் கொண்டவனுக்கு வாழ்கையில் சகல நிலைமைகளிலும் மூன்று விசயங்கள் இன்றியமையாதவை, அவை அல்லாஹிவின் கட்டளைகளுக்கு கீழ் படிந்து நடப்பதும், விலக்கப்பட்டவற்றை விலக்கலும், இறைவன் திருச்சித்தத்தை மனமுவந்து ஏற்பதுமாகும். குறைந்த பட்சம் மெய் விசுவாசி இம்மூன்று அனுஷ்டானங்களிலுமாவது ஒழுங்காய் இருந்து வரவேண்டும் ஆகையால், அவன் இவற்றுக்காகவே மனத்தைத் தயாராக்கி, இவையற்றியே தன்னூல் பேசி, தன் அங்கங்களை இவற்றிலேயே ஈடுபடுத்தியவனாய் இருப்பதே பொருத்தமாகும்.

உபதேசம் இரண்டு 
உண்மை விசுவாசத்துடன் (நபிபெருமான் (ஸல்) அவர்களின் பாதச்சுவட்டை பின்பற்றி நடவுங்கள்! மார்க்கத்தில் புதுமை பித்அத்) ஆனவைகளை உண்டாக்க வேண்டாம். (இறைவனுக்கும் அவன் தூதரக்கும்) கீழ்படியுங்கள் வழி தவறிவிடவேண்டாம் ஏகத்துவத்தைப் பாதுகாத்து இறைவன் எத்தீமையையும் உண்டாக்கி விட்டான் என்று கூறாதபடி உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் அவன் சத்தியத்தை நிலை நாட்டி, ஐயத்திற்கு இடம் தறாதிருங்கள்! பொருமையுடன் நிதானம் தவறாதிருங்கள் உறுதியுள்ளவர்களாய், ஓடிப்போகாதிருங்கள், உங்கள் தேவைகளுக்கு அவனிடமே முறையிடுங்கள் அம்முறையீடு கேட்கப்படுவதற்கு பொறுமையுடன் காத்திருங்கள்! அவனுக்கு அடிபணிவதில் ஐக்கியப்படுங்கள், ஒற்றுமைக்குலைவுக்கு இடந்தரவேண்டாம் பரஸ்பரம் அன்பு காட்டுங்கள் ஒருவரை ஒருவர் துவேசிக்க வேண்டாம் தீய பழக்கங்களிலிருந்து விலகுங்கள் அவற்றால் மாசடைந்து விடாதீர்கள் உங்கள் ரக்ஷகனுக்கு அடிபணிவதன் மூலம் உங்களை அழகுபடுத்துங்கள் அவனிடம் கவனம்காட்டத்தவற வேண்டாம் நீங்கள் (செய்த தவறுகள் குறித்து) பச்சாதாப்படத் தாமதம் வேண்டாம் அல்லும் பகலும் உங்களை சிருஷ்டித்தவனை நினைவு கூறாது சாக்குப்போக்குச் சொல்லவேண்டாம் இவ்விதம் சதா அவன் தியானத்திலேயே இருந்தால் உங்களிடம் கருணை காட்டப்படலாம். உங்களுக்கு நல்லதிஷ்டம் உண்டாகலாம் நரகாக்கினியிலிருந்து விமோசனமும் சுவர்க்க வாழ்வு பெற்றுச் சாந்தியின் உறைவிடத்திலே ஹூரிகளின் குழாத்திடையில் இறைவனின் ஆசியோடு தரிபட்டிருக்கலாம் அதே நிலையில் என்றும் இருக்கலாம். நல்ல குதிரைகள் மீது சவாரி செய்யலாம். கண்ணழகிகளின் நேசத்தில் மகிழலாம். பலவித வாசணைகளும் பெண்களின் இன்னிசையும் மற்றும் பல பாக்கியங்களும் அங்கே கிட்டும் உயரிய வாணுலகில் நபிமார்கள்,சத்திய நேயர்கள், வீரத்தியாகிகள், நேர் வழியாளர்களின் கூட்டத்திற்கு உயர்த்தப்பட்டவர்கள் ஆகுங்கள் 

உபதேசம் மூன்று 
அல்லாஹ்வின் அடியான் ஒரு சோதனைக்கு ஆளாகும்போது முதலில் தன் முயற்சிகளால் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறான் அவன் தோல்வியுற்றால் மானிடரிடையே உள்ள அரசர், அதிகாரிகள், போன்றவர்களின் உதவியை நாடுகிறான் நோய்,நொடியாக இருப்பின் வைத்தியனுடைய உதவியை நாடுகிறான் இதன் மூலம் சோதனையிலிருந்து விடுபட இயலாது போய்விடின் அதன் பின் அவன் சர்வலோக இரட்சகனான அல்லாவின் பக்கம் திரும்புகிறான் தொழுகையாலும், பிரார்தனையாலும் பணிவோடு அவனிடம் விண்ணப்பம் செய்கிறான். தன்னாலேயே நிவர்த்திகாண முடியும்வரை அவன் பிறர் உதவியையோ தன் சிருஷ்டியாளன் உதவியையோ நாடமாட்டான். 

அல்லாஹ்விடமிருந்து அவனுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவன் சந்நிதானத்தில் விழ்ந்து, இரந்தும், மண்றாடியும், பணிவோடு வேண்டியும், பயபக்தியோடும், நம்பிக்கையோடும் தன் தேவையைச் சமர்ப்பித்தும் முறையிட்டவாறே கிடப்பான். சர்வ வல்லமையாளனான அல்லாஹ் அவனை அதிகம் சோதிப்பான் உலகிலுள்ள சகல வழி வகைகளும் அவனுக்கு இல்லாதுபோய்விட்டன என்றாகும்வரை அவனுடைய பிரார்தனையை ஏற்க்கமாட்டான். அதன் பின் அல்லஹ்வின் கட்டளையும் செயலும் அவனிடம் வெளியாகும் அல்லாஹ்வின் இந்த அடியான் சகல உலகப்பாதைகளையும், உலகின் நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் விட்டு அப்பாலாகிவிடுவான் தன் ஆத்மாவை மட்டும் தன்னகத்தே கொண்டவனாய் இருப்பான் 

இவ்வித நிலையில் அவன் சர்வ வல்லமையாளனான இறைவனின் வேலையையன்றி வேறு எதையும் காணான். அவசியமாக நிச்சயபூர்வமான அளவுக்கு ஏகத்துவத்தில் அவன் நம்பிக்கை கொண்டவனாகிறான் எதையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. 

எதையும் அசைப்பவனும், நிறுத்துபவனும் அவனன்றிவேறு யாருமில்லை எந்த நன்மை தீமையும் எந்த இலாப நஸ்டமும், எந்த இன்ப துன்பமும், எந்த எடுத்தலும் கொடுத்தலும், எந்த திறப்பும் அடைப்பும் எந்த ஜீவ மரணமும், எந்த கௌரவ அகௌரவமும், எந்தச் செல்வமும் வறுமையும் அவனாலன்றி வருவதில்லை என்பதை இன்னிலையில் அவன் உணர்வான். 

இதன் பின் தன்னை பாலுட்டி வளர்க்கும் தாதியின் கையிலுள்ள குழந்தையைப்போல, தன்னை குளிப்பாட்டுபவர்கள் கையில் கிடக்கும் மையித்தைப்போல, பூமியில் வைக்கப்பட்டு தன்னை மட்டையாள் அடிக்கப்போகிறவர் முன்கிடக்கும் பந்தைப்போல அவன் அல்லாஹ்வின் திருச்சமூகத்தில் சரணடைந்து சுழன்றுகொண்டு, உருண்டு கொண்டும் இருப்பான். தன்னிடமோ தன்னருகில் உள்ளோர்களிடமோ அசைவதற்குக் கூடப் பலம் இல்லாதிருப்பதைக் காண்பான். இவ்விதமாக அவன் தன் எஜமானனின் வேலையுள் மூழ்கித் தன்னகத்தில் இருந்தே மறைந்தவனாகி விடுவான். 

எனவே அவன் தன் எஜமானனையும் அவன் திறனையும் அன்றி வேறு எதையும் காணான். அவனையன்றி வேறு யார் பேசுவதையும் கேளான். புரிந்து கொள்ளான், அவன் எதையாவது கண்டால் அது அல்லாவுடைய வேலையேயாகும் அவன் எதையாவது கேட்டறிந்தால் அது அல்லாஹ்வின் வார்தையேயாகும், அவன் எதையாவது புரிந்து கொண்டால் அது அல்லாஹ்வுடைய ஞானத்தினுடையவனாகிறான். அவனை அண்டியிருப்பதனாலேயே அதிஷ்டவனாய் இருக்கிறான். அவனை அண்டியிருப்பதன் மூலமே அவன் மதிப்பும் மரியாதையும் பெறுகிறான். திருத்தியும் ஆறுதலும் அடைகிறான். அல்லாஹ்வின் வாக்குறுதியால் தன் மனம் நிறைந்து அவன் வார்த்தையின் பக்கல் இழுக்கப்படுகிறான். அவனுக்கு புறம்பானவர்களை அவன் வெறுத்து ஒதுங்கிக் கொள்கின்றான் அவன் நினைவு கூர்தலை விரும்பி அதில் நம்பிக்கை கொள்கிறான். அந்த மஹா வலுப்பகமானவனிடம் ஸ்தாபிதம் பெற்றவனாகி விருகிறான். அவனிடமிருந்து ஒளி பெற்று உடுத்துக்கொள்கிறான். அவன் ஞானத்தின், அவன் சக்தியின், இரகசியத்தின் அபூர்வமான விசயங்களை விளங்கிக்கொள்கிறான். அந்த மகா சக்தியினிடமிருந்து கேட்டு நினைவால் அவனைப் புகழ்ந்து, துதித்து தொழுகையில் ஈடுபடுகிறான். 

தரிக்காகளின் முரீதுகளை விழித்து குத்துபுநாயகம் சொன்னவை. 
 
1. என் முரீதே! உனக்கு சுபசோபனம் உண்டாவதாக, நான் உனக்களித்த உத்தரவுகளை நிறைவேற்றுவாயாக, நீ துக்கத்தில் ஆழ்கையில் உனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்து கரைசேர்க்க நான் இருக்கிறேன். 

2. என் முரீதே! நான் உன்னை இம்மையிலும் மறுமையிலும் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உறுதியுடன் என்னைப் பற்றி பிடித்துக் கொள்வாயாக 

3. நானோ என் முரீதுகள் அஞ்சுகின்றவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பவன், சகல தீங்குகளையும் சோதனைகளையும் விட்டு அவர்களைக் காப்பாற்றுபவன். 

4. என் முரிதே! நான் உனக்குச் சொன்ன வரையறைகளை பேணிக்காப்பாற்றி வா! வழி தவறாதே! மறுமை நாளில் உன் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசின் அருகே நானிருப்பேன். 

5. என் முரீது, நஸ்டத்திற்கு ஆளாகி வருத்தப்படும் நிலையில் என்னை அழைத்தால் நான் அவனுக்கு உதவுவேன். 

6. என் முரீதே! அஞ்சற்க அல்லாஹ் நமக்குப் போதுமானவன் அவன் எனக்கு உயரிய கருமங்களையெல்லாம் தந்துள்ளான். 

7. என் மரீதே மன மகிழ்வுடன் என்பாதையில் நட நாடிய கருமங்களை முடித்துவிடு என் திருநாமம் பிறருடையதை விட உயர்வானது

     இறுதிநாளின் பிறிதொரு அடையாளம் பயங்கரவாதி தஜ்ஜால் வெளியாகுதல்

 நாற்பது நாள்களில் உலகை வலம் வந்து மக்களை வழிகெடுப்பான் 

இப்றாஹிம் நத்வி

இறுதி நாளின் அடையாளங்கள் பலவுள, அவற்றுள் மிக முக்கியமானதும் உலகப் பிரசித்தம்பெற்றதும் தஜ்ஜாலின் வருகை பற்றியதாகும். 

தஜ்ஜால் பற்றி நபீகள் (ஸல்) அவர்கள் பல கருத்துக்களை நவின்றுள்ளார்கள் 

“ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதற்கும் இறுதி நாளுக்குமிடையில் எத்தனையோ “பித்னஹ்” குழப்பங்கள் ஏற்படும். அவற்றுள் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பமே மிகப்பெரியதாகும்.” அன்று நபீகள் (ஸல்) நவின்றார்கள். 

மேலும் நபீகள் சொல்கையில் ‘உலகில் தோன்றிய நபீமாரெல்லாம் தங்களின் சமூகத்தவர்களுக்கு தஜ்ஜால் பற்றியே எச்சரித்தும் அவன் பற்றிய வர்ணனைகளையுமே செய்துள்ளார்கள்’ என்று! 

மேலும் நபீகள் சொல்கையில் “தஜ்ஜால்” ஒரு குருடன் உங்களின் இரட்சகனாகிய இறைவன் குருடனல்லன்’ என்று! 

மனிதனா? இப்லீஸா! 
நபீ (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, தஜ்ஜாலைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் அவன் ஆதமின் மைந்தனா? அல்லது இப்லீஸின் மகனா? என்று கேட்டார். 

அதற்கு நபீகள் (ஸல்) ‘அவன் ஆதமின் மகன்தான். ஆனால் அவனது தாய் இப்லீஸின் பிள்ளைகளில் ஒருவர். அவன் உங்கள் (கேள்வி கேட்டவர் ஒரு யஹூதி) கூட்டத்தாரைச் சேர்தவனே என்று பதிலளித்தார்கள். 

தஜ்ஜாலின் பெயர்கள் 
தஜ்ஜாலுக்கு பல பெயர்கள் உள்ளன. சிலர் அவனை ‘ஸாயிப்பின் ஸய்யாத்’ என்றழைகின்றனர். பிறிதொருரிவாயத்தின்படி அப்துல்லாஹ் என்றழைக்கப்படுகின்றான். மேலும் அவன் ‘மஸீத்’ என்றும் அழைக்கப்படுகின்றான் காரணம் அவனது இரண்டு கண்களில் ஒன்று தடவப்பட்டுள்ளது. இன்னொரு கருத்தின்படி குறுகிய காலத்தில் அவன் பூமியைக் கடப்பதனாலும் ‘மஸீஹ்’ என்று அழைக்கப்படுகின்றான் 

மேலும் ‘கத்தாப்’ பொய்யன் என்று பெயர் சொல்லப்படுகின்றான் இன்னும் சமூகத்திற்கு எச்சரிக்கை செய்த பல பெயர்களும் அவனுக்குள்ளன. 

அவதாரமும் நபீத்தோழர்கள் கண்ட அதிசயமும் 
நபீ (ஸல்) அவர்கள் ‘மஸ்ஜிதுன் நபவீ’ பள்ளிவாயலில் சுபஹ் தொழுதுவிட்டு தோழர்களுடன் இருக்கும்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், முஹம்மது பின் ஸலாம் ஆகிய நபீத்தோழர்கள் வந்து, அல்லாஹ்வின் றஸூலே என்றழைத்து சலாமுரைத்து நின்று 

எங்களின் வாழ்கையில் இதுவரை கண்டிராத, கேட்டிராத அதிசயமிகு விடயத்தைக் கண்டு வந்துள்ளோம் என்றனர். 

நபீயவர்கள் அது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் (அப்போதழைக்கப்பட்ட) முஸ்தபா என்ற ஊரில் அதன் தலைவரிடம் இருக்கும்போது யஹூதிகளான கத்தா-ஸாஹில் என்ற தம்பதியினருக்கு தஜ்ஜால் பிறந்து விட்டான் என்ற பின்வரும் செய்தி கிடைத்தது 

அவனது அன்னை ‘கத்தா’ கைதேர்ந்த சூனியக்காரியாகவும் பொய்சொல்பவளாகவும் பெண்களின் மகா கெட்டவளாகவும் இருந்தாள். அவனுடைய தந்தை அவனுக்கு ‘அறுஸ்’ என்றும் தாய் ‘தஜ்ஜால்’ என்றும் பெயர் வைத்தனர். 

அவன் பிறந்தபோது உடன் நேராக இருந்து தனது தாயைப் பெயர் கூறி அழைத்தான். பின்பு ஏதோ ஒன்றை ஓதி அதைத் தனது உடலில் அவனே ஊதியபோது மலைபோல் ஆனான் பின்பு சிறியவனானான், பின்பு பெரியவனானான் இப்படியெல்லாம் தனது வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தான். அதை மனிதர்கள் அறிந்து அவனை பார்ப்பதற்கு பெரும் திரளாகச் சென்று கொண்டிருந்தனர். நாங்களும் இதைக் கேள்வியுற்று அறிந்தபோது அவனைக் காணவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கும் ஏற்பட்டது உடன் “அமீர்” தலைவரிடம் அனுமதி பெற்று அவனது வீட்டுக்குச் சென்றோம் அவன் தனது தாயுடன் அமர்ந்திருந்தான் எங்களை அவன் கூர்ந்து பார்த்தான் அப்போது அவனது தாய் மகனே, முஹம்மதின் தோழர்கள் இருவர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னாள். 

அவன் முஹம்மது (ஸல்) அவர்களின் திருப்பெயரை கேட்டபோது நிச்சயமாக முஹம்மது எனது பகைவர், அவரைத் தவிர எனக்கு பகைவர் இல்லை என்று சொன்னவன் ஏதோ ஓதி அதை தனது உடலில் ஊதினான் உடன் மலைபோல் தொன்றினான். “ நான், ஆணவம்” மிகைத்தவனாக பெருமையடித்தான் அவனது இத்தனை நடவடிக்கைகளையும் கண்ணுற்ற நாங்கள் இவன்தான் தஜ்ஜால் என்று உறுதி செய்து கொண்டோம் என்று நபீகளுக்கு நவின்றனர். 

அவனில் வேறு ஏதும் கண்டீர்களா? என்று நபீகள் கேட்டார்கள். அதற்கு அவ்விருதோழர்களும் “அல்லாஹ்வின் திருத்தூதரே! அவன் இடது கண் குருடனாகவும் இருந்தான். அடர்த்தியான நீண்ட முடியிருந்தது அவனது இரண்டு கண்களுக்கிடையே இவன் இறைவனை நிராகரித்த காபிரும் சபிக்கப்பட்டவனும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஊர்மக்கள் அனைவரும் இவன் தஜ்ஜால்தான் என்று சொல்கின்றனர் என்பதாக நவின்றார்கள். 

நபீகள் கண்ட அதிசயக் காட்சி 
இதைக் கேட்ட நபீகள் திலகம் தனது தோழர்களுடன் முஸ்தபா என்ற ஊருக்கு புறப்பட்டார்கள். அவனது வீட்டு வாயிலை நெருங்கியபோது தனது தோழர்களை விளித்து “அலிப்லாம்மீம் ஸூறதுஸ்ஸஜ்தாஹ்” என்ற அத்தியாயத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அவன் தஜ்ஜாலாக இருப்பின் நாம் நினைத்ததை அறிவான் எமக்கதைத் தெரிவிப்பான் என்றார்கள். 

சஹாபாக்கள் அதை மனதில் நினைத்து கதவைத் தட்டினார்கள். அவனது தாய் கதவைத் திறந்தாள். நபீ (ஸல்) அவர்களையும் தோழர்களையும் கண்டு மகனுக்கு எடுத்துரைத்தாள். அது கேட்ட லயீன் (தஜ்ஜால்) எனது பகைவனுக்கு கதவைத் திறந்துவிடு என்றான். உத்தரவின்படி கதவை முழுமையாகத் திறந்து விட்டாள் அப்போது நபீகள் (ஸல்) அவர்கள் தங்களது இடது காலை முன்வைத்து உள்ளே நுழைந்தார்கள். அதை கண்ட நபீத் தோழர்கள் இவன் சபிக்கப்பட்ட தஜ்ஜால்தான் என்பதை திடமாக அறிந்து கொண்டனர். 

நபீகளைக் கண்ட தஜ்ஜால் அவர்களைக் கூர்ந்து நோக்கினான் எதுவும் பேசவில்லை, ஆனால் ஏதோ ஓதி உடலில் ஊதினான் உடன் மலைபோல் மாறிவிட்டான் அவனது இரு கண்களுக்குமிடையில் “காபிறுன் பில்லாஹி தஜ்ஜாலுன் கத்தாபுன்” என்று எழுதப்பட்டிருந்தது 

வினாவும் விடையும் 
நபீகள் (ஸல்) அவர்கள் அவனை விளித்து, சபிக்கபட்டவனே நாங்கள் உமது வீட்டுக்கதவடியில் வைத்து மனதில் நினைத்தது எது? என்று கேட்டார்கள். அதற்கவன் “அலிப்லாம்மீம் ஸூறஹ்” என்று சொன்னவன் அதில் சில வசனங்களையும் ஓதினான். இதைக் கேட்ட நபீகள் திலகம் மீண்டும் அவனை நோக்கி மல்ஊனே, இறைவன் ஏகன் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர் என்றும் சொல் என்றார்கள் 

உமரின் தீரம் 
அதற்கு அவன் உங்களின் இறைவன் நான்தான் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றான். இது கேட்ட வீர்ர் உமர் (றழி) அவர்கள் தனது வாளை உருவி அவனது தலையில் வெட்டினார்கள். அது அவனுக்கு எத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அவ்வாள் உயர்ந்து உமர் (றழி) அவர்களின் தலையைத் தாக்குவதற்கு நாங்கு விரல் அளவுக்கு அப்பாள் தெறித்தது. 

நபீ (ஸல்) அவர்கள் உடன் உமரின் பால் திரும்பி “உமரே! நீ ஏன் அவனை வெட்டினாய்?” அவனை வெட்டுவதற்கு நீ சாட்டப்படவில்லை, அவன் இறுதி நாள் வரை இருப்பான். அவனை அதிகமானோர் பின்பற்றுவர் அவர்களை அவன் வழிகெடுத்து நரகில் வீழ்த்துவான் என்று சொல்லியதைத் தொடர்ந்து அவனது வீட்டை விட்டும் வெளியேறினார்கள் அவர்களுடன் தோழர்களும் சென்று மதீனாவை அடைந்தார்கள் ஆனால் நபீத்தோழர்களில் சிலர் அங்கு நின்று தாமதமாகச் சென்றனர். 

போர் 
அவர்களைத் தொடர்ந்த தஜ்ஜால் நீங்கள் என்னை வாளால் வெட்டிவிட்டு உங்களது மதீனாவுக்கா செல்கிறீர்கள்? உங்களை நான் விடமாட்டேன் என்று சத்தவிட்டவாறு நெருங்கினான் நபீத்தோழர்களுக்கும் அவனுக்குமிடையே பெரும் சண்டை நிகழ்ந்தது சஹாபாக்கள் அம்புகளாலும், ஈட்டிகளாலும், கற்களாலும் அவனுக்கு எறிந்தனர் ஆனால் அவன் தன்னை நோக்கிய ஆயுதங்களைப் பார்த்து நில் என்றான் உடன் அவை அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மதில் சுவர்போல் அவனைத் தொடராமல் மாறின. இதைக்கண்ட நபீத்தோழர்கள் தோல்வியுற்று ஒரு மலையின் குகையினுள்ளே புகுந்தனர். 

தோழர்களின் அபயக்குரல் 
துரத்தி வந்த தஜ்ஜால் பெரியதோர் மலையைப் பிடுங்கி குகை வாசலை அடைத்துவிட்டான். நபீத்தோழர்கள் குகையினுள் கைதியானார்கள் வெளியில் வர அவர்களால் முடியவில்லை உள்ளேயிருந்து பெரும் சத்தமிட்டனர் இவர்களின் அபயக்குரல் உமர் (றழி) அவர்களுக்குக் கேட்டது அப்போது அவர்கள் மதீனாவில் வுழூ செய்து கொண்டிருந்தார்கள். வுழூ செய்வதை விட்டு விட்டு நபீயவர்களிடம் ஓடி வந்த உமர் (றழி) அவர்கள் யாறஸூல்லாஹ் இறுதிநாள் அண்மித்து விட்டது உங்களது தோழர்களை தஜ்ஜால் மலையில் அடைத்துவிட்டான் என்ற துயரச் செய்தியை நபீகளுக்கு எத்தி வைத்தார்கள். 

பிரார்த்தனை 
இதைக் கேட்ட நபீகள் (ஸல்) அவர்கள் கவலையுற்று அல்லாஹ் அளவில் முன்னோக்கி தனது தோழர்களைப் பாதுகாக்குமாறு பிரார்த்தித்தார்கள். நபீ (ஸல்) அவர்களின் பிராத்தனையை ஏற்ற இறைவனின் நபீத் தோழர்களைக் காப்பாற்றும் படியும் “காப்” மலையின் பின்னால் தஜ்ஜாலை அடைக்கும் படியும் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஃமீன்களை குகையிலிருந்து விடுதலை செய்து தஜ்ஜாலை சிறையிட்டார்கள். 

தஜ்ஜால் சிறையில் 
எழுபது சங்கிலிகளால் அவனைக் கட்டி விலங்கிட்டு அவனது நெஞ்சில் பெரியதோர் மலையை வைத்தார்கள். நெஞ்சில் மலையை வைக்கும்போது அவன் பெரும் சத்தமிட்டு நான் முஹம்மதின் மார்க்கத்தில் நுழைந்துவிடுகின்றேன் என்றான். அது கேட்டும் ஜிப்ரீல் (அலை) அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. 

அவன் தினமும் தனது நெஞ்சிலுள்ள மலையை நக்குவதாகவும் அது கொஞ்சம் நகர்வதாகவும் மறுநாள் முன்புபோல் அது ஆகிவிடுவதாகவும் இறுதி நாளில் அவன் வெளியாகும்வரை இன்நிலை தொடர்வதாகவும், இறுதி நாளானால் சங்கிலிகள் உடைந்து வெளிவருவான் என்றும் ஜிப்ரீல் (அலை) மூலம் நபீகளுக்கு அறிவிக்கப்பட்டது இது கேட்டு நபியவர்களும் தோழர்களும் மகிழ்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றியும் தெரிவித்தார்கள். 

தஜ்ஜால் பற்றிய பிறிதொரு தகவல் 
பாத்திமா பின் துகைஸ் அவர்கள் சொல்கிறார்கள் “தமீமுத்தாரீ என்ற தோழர் நபீ (ஸல்) அவர்களிடத்தில் சொன்னார்கள் நான் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்ட முப்பது பேருடன் சிரியா நாட்டிலிருந்து கடல் கப்பல் மூலம் ஒரு பிரயாணத்தை மேற்கொண்டேன். கடலில் கடும் காற்றும் அலையும் ஏற்பட்டது. கடலில் ஒரு மாதத்தைக் கழித்து சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீவை அடைந்தோம். 

அதிசயமிருகம் 
அங்கு எங்களை ‘அஹ்லுப்’ என்ற மிருகம் எதிர் கொண்டது. அம்மிருகத்திடம் நீயார்? என்று கேட்டோம் அதற்கது நான் ஒரு உளவாளி என்றது. ஏதாவது எமக்கு சொல் என்றோம் அதற்கு நான் எதையும் அறிவிப்பதற்கில்லை. ஆயினும் நீங்கள் இங்கிருக்கும் ஒரு மனிதரைச் சந்தியுங்கள் அவர் உங்களைப் பார்ப்பதற்கு ஆசையுடையவராக இருக்கிறார் என்றது. அது ஷைத்தானாக இருக்குமோ என்று அச்சமும் ஏற்பட்டது. 

பயங்கர மனிதன் 
இருப்பினும் துணிந்த நாங்கள் அதைத் தொடர்ந்து சென்றோம். அங்கே ஒரு பெரிய உருவத்தையுடைய ஒரு மனிதனைக் கண்டோம். அவன் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டான். அவனது கழுத்துடன் சேர்த்தும், முட்டுக்கால்களை கொண்டைக் காலுடனும் சேர்த்து கட்டப்பட்டு இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது 

நீயார்? என்று நாங்கள் கேட்டோம் அதற்கவன் எனது செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? நீங்கள் யார்? என்றான் நாஙகள் அறபு மக்கள் ஒரு மாதம் கடலில் தத்தளித்து இக்கரையை அடைந்தோம் இம்மிருகம் எங்களை உன்னிடம் அழைத்து வந்தது என்று சொன்னோம். 

தஜ்ஜாலின் கேள்விகள் 
அதற்கவன் ஷன்ஆன் ஈத்தம் தோப்பு உள்ளதா? அது தற்போது கணி கொடுக்கிறதா? என்று வினவினான். ஆம் என்று சொன்னோம் அதற்கவன் அது கணி தராத ஒரு காலம் வரும் என்றான். ஸஃர் ஊற்றுக்கண் பற்றி அறிவீர்களா? அதில் தற்போது நீர் உள்ளதா? அதைக் கொண்டு மக்கள் பயிர் செய்கிறார்களா? என்று கேட்டான் ஆம் உள்ளது அதைக் கொண்டு மக்கள் பயிர் செய்கிறார்கள் என்றோம். 

அடுத்து அல் அமீன் நபீயைப் பற்றி சொல்லுங்கள் என்றான் அதற்கு நாங்கள் அவர் மக்கஹ்வில் தோன்றி யத்ரிப் (மதீனா) நகரில் இருக்கின்றார் அறபிகள் அவருடன் போர் செய்கின்றனரா? என்று கேட்டான் ஆம் என்று கூறிய நாம் அவருக்கு மக்கள் வழிப்படுகின்றனர் என்றோம் அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லது என்றான். 

நானே மஸீஹூத் தஜ்ஜால் இதுவரை நான் வெளியாவதற்கு உத்தரவு கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்த்தும் நான் வெளியாகி ஊர்களைக் கடப்பேன் மக்கஹ், மதீனாஹ் தவிர்ந்த எல்லா ஊர்களையும் ஒரு கிராமமும் விடாமல் நாற்பது இரவுக்குள் கடந்து விடுவேன் மக்காவையும் மதீனாவையும் அடைவது எனக்கு தடுக்கப்பட்டுள்ளது என்றான். 

தஜ்ஜால் வருகைக்குரிய அடையாளங்கள் 
தஜ்ஜால் வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு காலநிலை மாற்றங்கள் தோன்றும் முதலாம் வருடத்தில் வானம் பெய்யும் மழையில் 1/3 பகுதியையும் பூமி தாவரத்தில் 1/3 பகுதியையும் தடுத்துக் கொள்ளும். 

இரண்டாம் வருடன் 2/3 பகுதி வானமும் பூமியும் மூன்றாம் வருடம் வானமும் பூமியும் அனைத்தையும் தடுத்துக் கொள்ளும். வானத்தில் இருந்து ஒரு துளி மழை கூட இறங்காது பூமியில் பசுமையே இருக்காது பூமி செம்புத்தரை போலும் வானம் கண்ணாடி போலும் காட்சி தரும் மக்கள் பசிதாகத்தால் மரணிப்பர் மக்களிடையே கொலையும் குழப்பங்களும் தோன்றும் மனிதர்கள் நன்மையை ஏவுவதையும் தீமையை தடுப்பதையும் விட்டு விடுவர் 

தஜ்ஜாலின் வருகை 
இத்தகு நிலையில்தான் இஸ்பஹான் தேசத்தில் ‘யஹூதிய்யஹ்’ என்ற கிராமத்தில் மல்ஊன் தஜ்ஜால் தோன்றுவான். பிறிதொரு ஹதீஸியின் படி கிழக்கில் குறாஸான் என்ற ஊரில் தோன்றுவான் என்றும் சொல்லப்படுகின்றது. 

அவன் தொன்றியதும் மூன்றுமுறை சத்தமிடுவான். இதைக்கிழக்கில் மேற்கில் வாழும் அனைவரும் கேட்பர். அவனுடன் விபச்சாரத்தில் உருவான் பிள்ளைகள் சேர்ந்து கொள்வர். அவனை அகமாகப் பெண்களும், காட்டறபிகளும், யஹூதிகள் கோபத்திற்குரியவர்கள், மூதேவிகள், சூனியக்காரர்களுமே பின்பற்றுவர். 

நபீகள் (ஸல்) அவர்களின் சமூகத்தினரில் எழுபதினாயிரம் பேர் பின்பற்றுவர் அவர்கள் பச்சை உடை அணிந்திருப்பர். அவனுக்குச் சூழால் எழுபதாயிரம் பேர் இசைக்கருவிகளுடன் செல்வர் பூமியின் கடவுள் என்று சொல்லிக் கொண்டு பவனி வருவர். அதை அவனைப் பின்பற்றுபவர்களே கேட்பர். 

அன்று சூரியன் பல நிறங்களில் உதயமாகும். ஒரு தரம் சிவந்து, மறுதரம் மஞ்சலாகவும், கறுப்பாகவும் தோன்றும் பூமி நடுங்கத்தொடங்கும். 

தஜ்ஜால் எப்படியிருப்பான் 
இறைவன் அவனை பெரும் படைப்பாகப் படைத்துள்ளான். உயரமானவன் அதற்கேற்ற உடலைக் கொண்டவன். உடல் முறுக்கேறியவன். வலது கண் பொன்டையானவன் இடது கண் இரத்த்த்தால் துவட்டப்பட்டவன். 

பிறிதொரு ஹதீதில் அவனது இடது கண் பச்சைபளிங்கி போன்றிருக்கும் அவனது தலை மரக்கிளைபோல் இருக்கும் அது தோள் புயத்தில் நீண்டு வழிந்திருக்கும், நெற்றி உயர்தவனும், மூக்குத் துவாரம் அகலமானவனுமாவான் அவனது கண்களுக்கிடையே “காபீர்” என்று எழுதப்பட்டிருக்கும் இதை எழுதத் தெரிந்த தெரியாத ஒவ்வொறு முஃமினும் அறிந்து கொள்வர். 

அவனது கழுதை
அவன் ஒரு கழுதையில் ஏறி வருவான் அதன் நீளம் ஒரு இலட்சத்து பதினெட்டு முழமாகும். அதன் இடது கால் வெள்ளியாலும் அதன் இரு செவிகளுக்கும் இடையிலுள்ள அகலம் நாற்பது முழமும் இருக்கும். அதன் நெற்றியில் ஓரம் உடைந்த கொம்பிருக்கும். அதன் வழியாக பாம்புகளும், நட்டுவக்காலிகளும் வெளியாகும் பெரும் ஆயுதங்களையும் சுமந்து செல்லும். மிருகங்களில் கழுதையைத் தவிர அதைப் பின் தொடராது. 

தஜ்ஜாலின் “பித்னஹ்” குழப்பங்களும், நடவடிக்கைகளும் 

‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது குழப்பங்களில் இருந்து எம்மைப் பாதுகாப்பானாக’ 
முதலில் அவன் தன்னை “நபீ” என்றும் பின்னர் “றப்” இறைவன் என்றும் சொல்வான். 
அவனுடன் தங்கத்தினாலான மலையொன்றும், வெள்ளியினாலான மலையொன்றும் உணவு பழங்களினாலான மலையொன்றும் கூடவரும். அதில் எவ்வளவு சாப்பிட்டாலும் அது குறையாது அவனது கூட்டத்தினர் அவனை உண்மைப்படுத்தி நீதான் எங்களின் தெய்வம் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். 

அவன் ஒரு நாட்டறபியைப் பார்த்து நான் உனது பெற்றோரை எழுப்பினால் என்னை உனது இறைவனாக ஏற்றுக்கொள்வாயா? என்று கேட்பான் அதற்கு அறபி ஆம் என்பான் உடன் தஜ்ஜால் அவனது பெற்றோர்களின் தோற்றத்தில் இரு சைத்தான்களைத் தோன்றுவிப்பான் அவர்கள் இருவரும் எங்கள் மகனே, இவரைப் பற்றிக்கொள் இவர்தான் உனது இறைவன் என்று சொல்வார்கள். 

மரித்தவர்களில் ஒருவரை எழுப்பி, அவரைக் கொலை செய்து இரு பகுதிகளாகப் பிளந்து இவனுக்கு நானே இறைவன் என்று சொல்வான். அப்போது இறைவன் அம்மனிதனுக்கு உயிர் கொடுப்பான். அம்மனிதனிடம் உனது இறைவன் யார்? என்பான் அதற்கு அந்த உயிர் பெற்ற மனிதன் எனது இறைவன் அல்லாஹ்தான் நீ அல்லாவின் பகைவனான தஜ்ஜால் என்பார். 

இம்மனிதரைப் பற்றி நபீகள் (ஸல்) அவர்கள் எனது சமூகத்தவரில் அந்த மனிதர் சொர்க்கத்தில் மிக உயர் பதவியை உடையவர் என்று நவின்றார்கள் 

இமாம் அபூசயீத் அல்குத்ரீ (றஹ்) அவர்கள் அம்மனிதர் அமீறுல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள்தான் என்று சொன்னார்கள் 

தஜ்ஜால் வானத்தைப் பார்த்து மழைபொலி என்று கட்டளையிடுவான் வானம் மழை பொழியும் பூமிக்கு கட்டளையிடுவான் பூமி புல் பூண்டுகளை முளைப்பிக்கும் 

பாழ் பூமியைப் பார்த்து உனது புதையல்களை வெளிப்படுத்து என்று ஏவுவான் உடன் புதயல்கள் அதிலிருந்து வெளிப்படும். 

இறைவன் தஜ்ஜாலுடன் இரு மலக்குகளை அனுப்புவான் அவர்கள் இரு நபீமார்களின் தோற்றத்தை ஒத்திருப்பார்கள் ஒருவர் அவனின் வலப்பக்கமும் மற்றவர் இடப்பக்கமும் இருப்பார். 

தஜ்ஜால் மனிதர்களிடம் நான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு வலப்பக்கதில் இருக்கும் மலக்கு நீ பொய்யன் பொய் சொல்கிறாய் என்பார். அவரது வார்த்தை இடப்பக்கத்திலிருக்கும் மலக்குக்கு மட்டுமே கேட்கும் மற்றவர்களுக்கு கேட்காது. மற்ற மலக்கு அதற்குப் பதிலாக நீங்கள் பொய்யன் என்று உண்மையே சொன்னீர்கள் என்பார். அங்கிருந்தவர்களுக்கு வலது மலக்கின் பொய்யன் என்ற வார்த்தை கேட்காததாலும் இடது பக்க மலக்கின் உண்மையே சொன்னீர்கள் என்ற வார்த்தை கேட்டதாலும் இவர் தஜ்ஜாலைத்தான் உண்மைப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்வார்கள் இதுவும் பெரும் குழப்பமேயாகும். (இக்கட்டனான இந்நேரத்திலும் மனிதனின் ஈமான் எப்படியிருக்கிறது என்பதை இறைவன் சோதிக்கிறான்) 

தஜ்ஜால் பிறவிக் குருடனை பார்வை பெறச் செய்வான் குஷ்டரோகியைச் சுகப்படுத்துவான் மரணித்தோரை உயிர் பெறச் செய்வான். 

ஆகாயத்தில் பறக்கும் பறவையை அழைத்து அறுப்பான் பின் அதை முன்புபோல் பறக்கச் செய்வான். 

அவனது வலது பக்கம் சொர்க்கத்தையும் இடது பக்கம் நரகத்தையும் கொண்டு வருவான் அவனைப் பின்பற்றியவரை சொர்க்கத்தில் வைப்பான் ஆனால் அல்லாஹ் அவனை நரகில் போடுவான். அவனுக்கு மாறுசெய்தவர்களை நரகில் போடுவான் ஆனால் அல்லாஹ் அவர்களை சொர்க்கத்தில் நுழைப்பான். 

தஜ்ஜால் கிழக்கிலும் மேற்கிலும் எல்லா ஊர்களுக்கும் செல்வான் ஒரு எட்டு வைத்தால் நாட்பது நாட்களின் தூரத்தை கடப்பான் எல்லா ஊர்களையும் அவன் கெடுப்பான் ஆனால் மக்கா மதீனா வைத்துல் முகத்தஸ், தூர்ஸீனா மலை ஆகிய நான்கு இடங்களிலும் அவனால் செல்ல முடியாது. 

மக்காவை அவன் நெருங்குவான் ஆனால் அதில் புக அவனால் முடியாது இறைவன் அதைச் சூழால் பெரும் நெருப்பையே எட்டுபடுத்தி விடுவான். 

மதீனாவுக்குச் செல்வான் அதன் வாயல்களில் மலக்குகள் அதைப் பாதுகாத்து அணிவகுத்து நிற்பர். அதனால் அவனால் அங்கு நுழைய முடியாது 

மதீனா மூன்றுமுறை துளுப்பும், அப்போது அதில் வாழ்ந்த முனாப்பிகீன்கள் அழிந்து விடுவர். 

பின் தஜ்ஜால் பாபில் என்ற நகரில் நுழைவான் அங்கு கழிர் (அலை) அவர்கள் அவனை எதிர் கொள்வார்கள் அவர்களிடம் நான்தான் “றப்புல் ஆலமீன்” என்று தஜ்ஜால் சொல்வான் அதற்கு கழிர் (அலை) நீ பொய் சொன்னாய் நீதான் பொய்யனான தஜ்ஜால் றப்புல் ஆலமீன் என்பவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் உன்னைப்போன்ற பொட்டைக் கண்ணன் அல்லன் என்பார்கள் 

இது தஜ்ஜாலுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர்களை கொலை செய்து விடுவான் பின் மக்களைப் பார்த்து நான் கொன்று விட்டேன் இவர் சொல்வதுபோல் இரு இறைவன் இருப்பின் இவரை உயிர்ப்பிக்கட்டும் பார்ப்போம் என்பான் 

உடன் அல்லாஹ் தஆலா அவரை அதேவேளை உயிர்பிப்பான் உயிர்பிக்கப்பட்ட கழிர் (அலை) எழுந்து நின்று தஜ்ஜாலே எனது இறைவன் என்னை உயிர்பித்துவிட்டான் என்பார். அவரை அறுப்பதற்கு தஜ்ஜால் முனைந்தபோது கழிர் (அலை) அவர்கள் மீது செம்பால் ஒரு கவசத்தை இறைவன் ஏற்படுத்துவான். அவனால் அவரை அறுக்க முடியாமல் போகவே தஜ்ஜால் தோல்வியடைவான். 

இதுபற்றி ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபி (றழி) அவர்கள் சொல்கையில் அறுக்கப்பட்டு உயிர் பெறுபவர் கழிர் (அலை) அல்ல அவர் ஈமான் நிரம்பப் பெற்ற ஒரு வாலிபராவார் அவரை கஷ்புடையவர்கள் கண்டு கொண்டுள்ளனர் என்றார். 

இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் நவில்கையில் ‘இறையடியார்களே! ஈமானில் உறுதியாக இருங்கள் உங்களில் யாராவது அவனைச் சந்தித்தால் “ஸூரத்துல் கஹ்ப்” அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்றார்கள். 

அல்லாவின் தூதரே அவன் பூமியில் எவ்வளவு நாள் இருப்பான் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபீகளார் “அவன் நாற்பது நாட்கள் இருப்பான் அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றது, இன்னும் ஒரு நாள் ஒரு மாதம் போன்றது, இன்னும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றது, ஏனைய நாட்கள் உங்களது நாட்கள் போன்றவை’ என்றார்கள் 

யாறஸூலுல்லாஹ் அவன் பூமியில் எவ்வாறு விரைவான் என்று கேட்டார்கள். “காற்று வீசும் மழைபோல்” என்று நபீகளார் பதிலளித்தார்கள். 

பைத்துல் முகத்தஸில் முஸ்லீம்கள் தஞ்சம் 

பின் தஜ்ஜாலின் தாக்குதலால் பிரிந்துசென்ற முஸ்லீம்கள் பைத்துல் முகத்தஸில் ஒன்று சேர்வார்கள். தஜ்ஜாலின் படைகளுடன் போர் தொடுப்பதற்கு தம்மைத் தயார் செய்யுமாறு மஹ்தீ (அலை) அவர்களிடம் வேண்டிக் கொள்வார்கள். 

உடன் மஹ்தி (அலை) படைகளைத் தயார் செய்து தாமும் சென்று தஜ்ஜாலுடன் கடும் சமர் புரிவார்கள். 

இச்சமரில் காபீர்களில் ஒரு இலச்சம்பேரும் முஸ்லீம்களில் முப்பதாயிரம் பேரும் கொல்லப்படுவார்கள் . மஹ்தீ (அலை) அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து போராடுவது கஷ்டமாக இருக்கும், அதனால் பைத்துல் முகத்தஸில் நுழைந்து அதன் வாயில்களை மூடிக்கொள்வார்கள். 

தஜ்ஜாலும் அவனது படைகளும் பைத்துல் முகத்தஸை அடையும்போது அங்கு காவலில் நிற்கின்ற மலக்குகள் அவர்களைத் துரத்தியடிப்பார்கள் உடன் மஹ்தீ (அலை) அவர்களும் தோழர்களும் இறை பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள் 

யா அல்லாஹ்! தஜ்ஜாலின் பித்னஹ்விலிருந்தும், அவனது சூழ்ச்சியிலிருந்தும் காப்பாற்றுவாயாக என்று. 

அப்போது இறைவனிடமிருந்து பின்வரும் செய்தி வரும் “ முஸ்லீம்களே! உங்களை இரட்சிப்பவரும், உதவி செய்பவரும் உங்கள் இறைவனிடமிருந்து வந்து விட்டார்” என்று இதைக் கேட்ட முஸ்லீம்கள் மகிழ்ச்சியடைவார்கள். 

தஜ்ஜாலை வெட்டிக் கொல்லும் நபீ ஈஸா (அலை) அவர்களின் வருகையே இறைசெய்தியில் குறிப்பிடப்படுவதாகும். 

முற்றும். 

கட்டுரை –சங்கைக்குரிய மௌலவி இப்றாஹிம் நத்வி 
பிரசுரம்- அல்மிஷ்காத் ஜூலை மாதம் 2006 ம் ஆண்டு இதழ்.

welcome

 


 

widgets

 

Ramadan

Subscribe To Our Site

Webs Counter

Realtime Clock

The Weather Channel

Share on Facebook

Share on Facebook

Send to a friend

Skype Button with Status

My status

Facebook Like Button

Send to a friend

Twitter Follow Button

 


 

widget

 

 


 

widgeo.net